ஒயின் ஷாப்பில் குடித்துவிட்டு கூத்தடிக்கும் ஜப்பானியர்கள்..!! மின்னல் வேகத்தில் எகிறும் கொரோனா..!!

By Ezhilarasan BabuFirst Published May 1, 2020, 7:01 PM IST
Highlights

பெரும்பாலான மக்கள் கூட்டம் கூட்டமாக  குடி கும்மாளம்  என சாலைகளில் படையெடுப்பதும்,  மதுக்கூடங்களில் பொழுது கழிப்பது என உல்லாசம் அனுபவித்து வருகின்றனர்

கொரோனா வைரஸுக்கு உலகமே அஞ்சி நடுங்கி வரும் நிலையில்  அதன் கொடூரம்  புரியாமல் ஜப்பானியர்கள் தான்தோன்றித்தனமாக நடந்து வருகின்றனர், இதனால் அந்நாட்டில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் , மக்களை கட்டுபடுத்த வழி தெரியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது .  கரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது ,  கிட்டத்தட்ட 180 க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன,  உலக அளவில் 30 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது .  அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளன.  அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா என அனைத்து கண்டங்களிலும் கொரோனா தன் கொடூர  கரத்தை பரப்பியுள்ளது .  குறிப்பாக இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் ஜெர்மனி அமெரிக்கா பிரிட்டன் என வல்லரசு நாடுகள் இந்த கொரோனாவிடம்  சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றன. 

இதுவரை லட்சக்கணக்கில் மக்களை பறிகொடுத்துள்ள நிலையில்,  இந்த வைரசை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல்  திணறி வருகின்றன. ஆனால்  இன்னும் ஒரு சில நாடுகளில்  இந்த வைரஸின் கொடூரம் புரியாமல் மக்கள் நடந்து கொள்ளும்  சம்பவங்கள் பிற உலகநாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  குறிப்பாக ஐரோப்பா அமெரிக்கா  போன்ற நாடுகளில் வைரஸ் தீவிரமாக பரவிய நிலையில் ரஷ்யா ஜப்பான் போன்ற நாடுகள் அதிலிருந்து பாதுகாப்பாக ஒதுங்கி இருந்தன ,  இந்நிலையில் கிழக்காசிய நாடுகளில் ஒன்றான  ஜப்பானுக்குள் தற்போது மெல்ல  ஊடுருவியுள்ள கொரோனோ அங்கு காட்டுத்தீயாக பரவி வருகிறது .  இதுவரை 14 ஆயிரத்து 88 பேருக்கு அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது .  430 பேர் உயிரிழந்துள்ளனர் ,  2460 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர் .  சுமார் 11 ஆயிரத்து 198 பேர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்றுவருகின்றனர் .  308 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் உயிருக்கு போராடி வருகின்றனர் .  இந்நிலையில் நாளுக்கு நாள்  அங்கு கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால், 

அந்நாட்டு அரசு அங்கு அவசர பிரகடனம் செய்துள்ளது,  அதே நேரத்தில் மற்ற நாடுகளைப் போல் இல்லாமல் மக்களின் அத்தியாவசிய தேவைகள் உறுதிசெய்யப்படும் என்றும்  ஒரு மென்மையான ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும்  ஜப்பான் அறிவித்ததை அடுத்து ,  நாட்டில் பெரும்பாலான  உணவகங்கள் மதுபான கூடங்கள்  இன்னும் திறந்தே உள்ளன ,  இதனால் பெரும்பாலான மக்கள் கூட்டம் கூட்டமாக  குடி கும்மாளம்  என சாலைகளில் படையெடுப்பதும்,  மதுக்கூடங்களில் பொழுது கழிப்பது என உல்லாசம் அனுபவித்து வருகின்றனர்.  இன்னும் கூட ஜப்பானில் கொரோனா குறித்து அச்சமோ விழிப்புணர்வோ இல்லாமல் மக்கள் வீதிகளில் உலா வருகின்றனர்.  இது  அங்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என சர்வதேச ஊடகங்கள் எச்சரிக்கின்றன.  மக்கள் கட்டுப்பாட்டை மீறி வரும்  நிலையில் எப்படி அவர்களை கட்டுபடுத்துவது என தெரியாமல் ஜப்பான் அரசு திணறி வருகிறது ,   ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தன் கொடூர முகத்தை காட்ட தொடங்கியுள்ள அதே நேரத்தில் ஜப்பானையும் அது புரட்டி எடுக்க போகிறது என வல்லுனர்கள்  எச்சரிக்கின்றனர். மக்கள் அங்கு கட்டற்று திரியும் நிலையில்  நேற்று ஒரே நாளில்   70 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .  கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . 
 

click me!