நியூயார்க்கை தட்டி தூக்கும் மாஸ்கோ..!! தலையில் கைவைத்து அமர்ந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்..!!

By Ezhilarasan Babu  |  First Published May 1, 2020, 5:29 PM IST

அமெரிக்காவில் நியூயார்க் கொரோனா தொற்று மையாக மாறியது போல்,  ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவும் கொரோனா மையமாக மாறி வருகிறது


அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யாவில் கொரோனா பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை பன் மடங்காக உயர்ந்துள்ளது ,  இதனால் அங்கு மக்கள்  கொத்துக்கொத்தாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்,  இந்நிலையில்  நேற்று ஒரே நாளில் ரஷ்யாவில் சுமார் 8,000 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை விரைவில் ரஷ்யா அடைய வாய்ப்பிருக்கிறது என சுகாதாரத் துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர் .   கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் அங்கு இரண்டு மாத காலம் சீனாவை முடக்கியது,  பின்னர்  ஐரோப்பா கண்டத்திற்கும் தாவிய அந்த வைரஸ்,  இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை மிகக் கடுமையாக தாக்கியுள்ளது,  பின்னர் கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு பரவிய அந்த வைரஸ் அமெரிக்காவை மிகமோசமாக கபளீகரம் செய்து வருகிறது. 

Latest Videos

இதுவரையில் அமெரிக்காவில்  10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் ,  அங்கு மட்டும் 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்  ஐரோப்பா அமெரிக்கா நாடுகளில் கொரோனா தீவிரம் காட்டி நிலையில் ,  ரஷ்யா ஜப்பான் போன்ற நாடுகள் அந்த வைரஸிலிருந்து தப்பித்திருந்தனர் , ஆனால்  கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவில் மெல்ல தலைகாட்ட தொடங்கிய கொரோனா தற்போது  அங்கு கட்டுக்கடங்காத காட்டுத்தீயாக பரவி வருகிறது .  ஒரு சில வாரங்களிலேயே அங்கு பன்மடங்காக உயர்ந்த கொரோனா தொற்று ரஷ்யாவில் மக்களை கொத்துக் கொத்தாக பீ டித்து வருகிறது .  இதனால் கொரோனா வைரஸ் தொற்று பட்டியலில் மிகவும் பின்தங்கியிருந்த ரஷ்யா தற்போது அந்தப் பட்டியலில் பத்தாவது இடத்திற்கு மின்னல் வேகத்தில் முன்னேறி உள்ளது .  இதுவரையில் அங்கு ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 431 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . 

சுமார் ஆயிரத்து 169 பேர் உயிரிழந்துள்ளனர் ,  நேற்று ஒரே நாளில் 96 பேர் உயிரிழந்துள்ளனர் ,  சுமார் 13, 220 பேர் நோய்த் தொற்றிலிருந்து சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினயுள்ளனர்,  கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .  அதில் 2300 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகின்றனர் .  மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் ரஷ்யாவில் இந்த வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு  என்றாலும்,  ஒரே நாளில் நேய்த்தொற்று  7 ஆயிரத்து 933 பேருக்கு அங்கு  உறுதி செய்யப்பட்டுள்ளது .  இதுவரை ரஷ்யாவில் ஏற்பட்ட அதிகபட்ச நோய்த்தொற்று இது என கருதப்படுகிறது .  இன்னும் ஒரு சில வாரங்களில் துருக்கி ஜெர்மனி பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை கடந்து ஸ்பெயின் இத்தாலி பிரிட்டன் என உச்சபட்ச நோய் பாதித்த நாடுகளின்  வரிசையில் ரஷ்யா இடம்பிடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ரஷ்யாவில் இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது,  முற்றிலுமாக அங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பொதுப் போக்குவரத்தை தடை செய்யப்பட்டுள்ளது .  ஆனாலும் நோய்தொற்று அதிகரித்தே காணப்படுகிறது,   மக்கள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு பணியாற்றும் மருத்துவர்களும் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும்  போதுமான அளவில் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் மருத்துவ உபகாரணங்கள் மற்றும்  போதிய படுக்கை வசதிகள் அங்கு இல்லை என மருத்துவர்கள் ரஷ்யாவின் பொதுச்சுகாதார கட்டமைப்பை கடுமையாக விமர்சித்து வருவதுடன் , அரசுக்கு எதிரான போராட்டத்தையும் வெளிபடுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் நியூயார்க் கொரோனா தொற்று மையாக மாறியது போல், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவும் கொரோனா மையமாக மாறி வருவது குறிப்பிடதக்கது.  
 

click me!