ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு வில்லனாக மாறி இருக்கும் எவ்கெனி பிரிகாசின்; யார் இவர்?

By Dhanalakshmi GFirst Published Jun 24, 2023, 10:51 AM IST
Highlights

ரஷ்யாவின் தனியார் ராணுவப் படை, போராளிகள் படை, கூலிப்படை என்று அழைக்கப்படுகிறது வாக்னர் குழு. இந்தக் குழுவுக்கு தலைவராக இருப்பவர் எவ்கெனி பிரிகாசின். இவரை ஆயுதம் ஏந்திய போராளி என்று கிரம்ளின் அறிவித்துள்ளது.

போராளிகள் குழு, கூலிப்படை என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வரும் வாக்னர் குழுவுக்கு தலைவராக இருக்கும் எவ்கெனி பிரிகாசின் ரஷ்யாவில் ஸ்டாராக உருவாகி இருக்கிறார். போராளிகளை ஊக்கப்படுத்தும் தலைவராக எவ்கெனி பிரிகாசின் மாறி இருக்கிறார். இவருக்கும், அதிபர் விளாடிமிர் புடினுக்கும் இடையிலான நட்பு 1990ஆம் ஆண்டுகளில் மலர்ந்துள்ளது. ஆனால், தற்போது தனக்கு செல்வாக்கு அதிகரித்து இருப்பதை உக்ரைன் போருக்குப் பின்னால் எவ்கெனி பிரிகாசின் உணர்ந்து இருக்கிறார்.

விளாடிமிர் புடினுக்கு சொந்தமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து தோன்றியவர் தான் எவ்கெனி பிரிகாசின். பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு சிறை தண்டனை பெற்றவர். சிறைவாசம் அனுபவித்தவர். 1979ஆம் ஆண்டில், 18 வயதில் முதல் முறையாக இவர் மீது குற்ற தண்டனை சட்டம் பாய்ந்தது. சிறையில் இருந்து வெளியே வந்த எவ்கெனி பிரிகாசின் நாய் கறிகளை விற்கும் கடைகளை அமைத்தார். சில ஆண்டுகளில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் விலையுயர்ந்த உணவகங்களை திறந்தார். இதற்குப் பின்னர் அரசியலுக்குள் நுழைந்து பெரிய மனிதர்களின் தொடர்பை பெற்றார். 

விளாடிமிர் புடின் ஆட்சியை கவிழ்க்க சதி; போராளிகள் தலைவரை கைது செய்ய உத்தரவு; உச்சகட்ட பாதுகாப்பில் ரஷ்யா!!

விரைவில் ரஷ்ய அரசின் கான்ட்ராக்ட்களைப் பெற்று ஏராளமான உணவகங்களை திறந்தார். அரசு இவருக்கு பல வகைகளில் உதவியது. இவரை ''புடின் செஃப்'' என்று ஒரு கட்டத்தில் மக்கள் அழைத்தனர். இதைத் தொடர்ந்து மீடியாவிலும் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். இன்டர்நெட்டில் முக்கிய நபராக வலம் வந்தார். அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் இணையதள ட்ரோல் மூலம் சிக்கிக் கொண்டார். 

இந்தியாவில் 15 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் அமேசான்: அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி

ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக தனது தனியார் ராணுவப் படையின் மூலம் போரிட்டதையும், நிதி உதவி அளித்ததையும் எவ்கெனி பிரிகாசின் ஒப்புக் கொண்டார். இவர் தனியார் ராணுவத்தை அமைத்து உக்ரைனுக்கு எதிராக புடினுக்கு ஆதரவாக போரில் செயல்பட்டார். இந்தப் போரில் புடினுக்கு கிடைத்த வரவேற்பை விட எவ்கெனி பிரிகாசினுக்கு ரஷ்ய மக்களிடையே அதிக ஆதரவும், பாராட்டும் கிடைத்துள்ளது. இதை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள எவ்கெனி பிரிகாசின் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தான் புடினுக்கு எதிராக பகிரங்க அழைப்பு விடுத்து காலத்திலும் இறங்கியுள்ளார்.

ஆப்ரிக்கா, மத்திய ஆப்ரிக்க குடியரசு நாடுகள், லிபியா, மாலி ஆகிய நாடுகளில் எவ்கெனி பிரிகாசின் ராணுவம் ஆதிக்கம் செலுத்தி இருப்பதை மேற்கத்திய நாடுகளும், ஐநா அதிகாரிகளும் வெளிப்படையாக சுட்டிக் காட்டியுள்ளனர். இதனால் மேற்கத்திய நாடுகளும் இவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இந்த நிலையில்தான் தற்போது புடினுக்கு எதிராக உருவெடுத்துள்ளார்.

click me!