ரஷ்யாவில் விளாடிமிர் புடின் ஆட்சியை கவிழ்க்க சதி; ரஸ்டோவ் மாகாணத்தை கைப்பற்றியது போராளிகள் குழு!!

By Dhanalakshmi G  |  First Published Jun 24, 2023, 9:15 AM IST

ரஷ்யாவில் அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக உருவான போராளிகள் குழுவின் தலைவரை கைது செய்ய கிரம்ளின் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ரஷ்யா முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 


ரஸ்டோவ் மாகாணத்தை கைப்பற்றி இருப்பதாக எவ்கெனி பிரிகாசின் அறிவித்து இருப்பது ரஷ்ய மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ரஷ்யாவை தனது அதிகாரத்தின் கீழ் வைத்துக் கொண்டு இருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு தனது நெருங்கிய தோழனிடம் இருந்தே சவால் உருவெடுத்துள்ளது. 

ரஸ்டோவ் மாகாணத்தின் விமான நிலையங்கள் தனது ராணுவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக எவ்கெனி பிரிகாசின் அறிவித்துள்ளார். ரஷ்ய மக்களுக்காக நாங்கள் உயிரை விடவும் தயாராகி விட்டோம். முதலில் பேர் உயிரை விட துணிந்து விட்டோம். பின்னர் 25,000 பேர் உயிரை விட துணிந்து இருக்கிறோம் என்று எவ்கெனி பிரிகாசின் தெரிவித்து இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

இதையடுத்து, ''நகருக்குள் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது'' என்று மாஸ்கோ மேயர் அறிவித்துள்ளார்.

வாக்னர் போராளிகள் குழு:

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஆதரவாக இருந்து தற்போது எதிராக மாறி இருக்கும் போராளிகள் குழுவான வாக்னர் அதிகாரம் மையமாக உருவாகி உள்ளது. இது தற்போது கிரம்ளின் அதிகார மையத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால் இந்தக் குழுவின் தலைவரை கைது செய்ய ரஷ்ய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உக்ரைன் நாட்டுக்கு எதிராக போர் தொடுத்து இருக்கும் ரஷ்யாவுக்கும், இந்தக் குழுவுக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் முற்றியுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுக்க அனைத்து வகையிலும் இந்தக் குழு ரஷ்யாவுக்கு உதவியுள்ளது. உக்ரைனை வெற்றி கொள்ள தாங்கள் தான் காரணம் என்று இந்தக்குழுவின் தலைவர் மறைமுகமாக அறிவித்து வந்துள்ளார். இது புடினுக்கும் வாக்னர் அமைப்பின் தலைவர் எவ்கெனி பிரிகாசினுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆட்சியைக் கவிழ்க்க இந்தக் குழு காய்களை நகர்த்தி வந்து இருப்பதை கிரம்ளின் மோப்பம் பிடித்ததை அடுத்து பதற்றம் தொற்றியுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு வில்லனாக மாறி இருக்கும் எவ்கெனி பிரிகாசின்; யார் இவர்?

தனியார் ராணுவப் படையாக இருந்து தற்போது போராளிகளாக மாறி புடினுக்கு தலைவலியாக மாறியுள்ளனர்.  

இந்தியாவில் 15 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் அமேசான்: அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி

எவ்கெனி பிரிகாசின் கைதுக்கு உத்தரவு:

விளாடிமிர் புடின் ஆட்சியை கவிழ்க்க வாக்னர் குழுவின் தலைவராக இருக்கும் எவ்கெனி பிரிகாசின் உறுதி எடுத்து இருக்கிறார். இந்த நிலையில் இவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரஷ்யா முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கிறது. 

மாஸ்கோவில் இருந்து 400 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் Lipetsk மாகாணத்தின் ஆளுநர் அர்டமோனவ் அமைதியாக இருக்குமாறு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இந்த மாகாணத்தில் அனைத்து உச்சகட்ட பாதுகாப்பும் செய்யப்பட்டு இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். தெற்கில் இருக்கும் ரஸ்டோவ் மாகாணத்தில் இருக்கும் மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், அமைதியாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

எவ்கெனி பிரிகாசின் ஆடியோ வெளியீடு:

மாஸ்கோவில் ராணுவ ஆட்சியை கவிழ்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து இருப்பதாக வார்னர் குழுவின் தலைவர் வ்கெனி பிரிகாசின் தெரிவித்துள்ளார். தனது படை அனைத்தையும் அழிக்கும் என்று அறிவித்துள்ளார். ஆடியோ வெளியிட்டு இந்த செய்தியை நாடு முழுவதும் பிரிகோசின் பரப்பி இருக்கிறார். 

⚡️Rostov now pic.twitter.com/CAYzC5Gw81

— War Monitor (@WarMonitors)

தனது ஆடியோ தகவலில், ''ரஷ்யாவின் தெற்கில் இருக்கு ரஸ்டோவ் மாகாணத்திற்குள் தனது படை நுழைந்து இருப்பதாக வ்கெனி பிரிகாசின் தெரிவித்து இருக்கிறார். தங்களது வழியில் யார் குறுக்கே வந்தாலும் அழிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஆடியோவை டெலிகிராமிலும் பதிவிட்டுள்ளார். 

இந்தியாவிற்கு வரும் கூகுளின் உலகளாவிய ஃபின்டெக் மையம்.. Google நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை அறிவிப்பு

எவ்கெனி பிரிகாசினுக்கு மக்களிடம் செல்வாக்கா?

இதையடுத்து ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு சர்வீஸ் வ்கெனி பிரிகாசின் மீது குற்ற வழக்கு பதிவு செய்துள்ளது. இவர் தனிப்பட்ட ராணுவ நிறுவனத்தின் தலைவர் என்றும், அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது. 16 மாதங்களுக்கு முன்பு உக்ரைனுக்குள் ராணுவத்தை அனுப்பியதில் இருந்து, புடின் அதிகாரத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறிய போராளிகள் படைத் தலைவருக்கும், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்புக்கும் இடையே நீண்ட காலமாக நடந்து வரும் சண்டையில் இந்த மோதல் மிகவும் உச்சகட்டத்தை தொட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் அதிபர் விளாடிமிர் புடினுக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. தங்களுக்குச் சவாலாக இருந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக வ்கெனி பிரிகாசின் கூறினாலும், வாக்னர் போராளிகள் தங்களது தலைவரான எவ்கெனி பிரிகாசின் உத்தரவை அமல்படுத்துவதில் எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை என்று மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் , தற்போது வெளிப்படையாக விளாடிமிர் புடினுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

click me!