புதிய போப் ஆக ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தேர்வானார்: மக்களுக்கு ஆசீர்வாதம்!!

Published : May 08, 2025, 10:06 PM ISTUpdated : May 08, 2025, 11:19 PM IST
புதிய போப் ஆக ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தேர்வானார்: மக்களுக்கு ஆசீர்வாதம்!!

சுருக்கம்

புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த மக்களிடையே பல நூற்றாண்டுகள் பழமையான இந்த சமிக்ஞை உடனடி உணர்ச்சிபூர்வமான எதிர்வினையை ஏற்படுத்தியது.

கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் வியாழக்கிழமை (மே 8) பிற்பகல் தொடங்கியது, சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியிலிருந்து வெண்புகை எழுந்தது, இது ஒரு புதிய போப்பின் வெற்றிகரமான தேர்வை குறிக்கிறது.

கார்டினல்கள் மதிய உணவு இடைவேளையில், சதுக்கத்தில் உள்ள மக்கள் எதிர்பார்ப்புடன் புகைபோக்கியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அறிவிப்புக்காகக் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் சுமார் 15,000 பேர் கூடியிருந்தனர்.

சதுக்கத்தில் கூடியிருந்த மக்களிடையே பல நூற்றாண்டுகள் பழமையான இந்த சமிக்ஞை உடனடி உணர்ச்சிபூர்வமான எதிர்வினையை ஏற்படுத்தியது. தேவாலயத்தில் மணிகள் மகிழ்ச்சியுடன் ஒலித்ததால், உலகெங்கிலும் இருந்து வந்த யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்தில் இருந்தனர். கொடிகளை அசைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டனர். 

புதன்கிழமை முதல் சிஸ்டைன் தேவாலயத்தில் இருந்த 133 கார்டினல் வாக்காளர்கள், போப் பிரான்சிஸுக்குப் பின் வரும் நபரைத் தேர்ந்தெடுக்க மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றனர்.

போப்பின் அடையாளமும், போப்பின் பெயரும் விரைவில் புனித பீட்டர் பசிலிக்காவின் மைய பால்கனியில் இருந்து உலகிற்கு அறிவிக்கப்படும். பின்னர் புதிய போப் தனது முதல் பொது உரை ஆற்றுவார். அங்கு கூடியிருக்கும் மக்களுக்கு ஆசீர்வாதம் கொடுப்பார். 

வாடிகன் திருச்சபையில் 1.4 பில்லியன் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த திருச்சபையை 12 ஆண்டுகள் ஆட்சி செய்த போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21 அன்று மறைந்தார்.  அவரது ஆட்சிக் காலத்தில், பல்வேறு சீர்திருத்தங்களை செயல்படுத்தினார். பெண்களை நியமித்தல் மற்றும் LGBT கத்தோலிக்கர்களை சிறப்பாகச் சேர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு இருந்தார்.

புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தேர்வு:

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் என்று அழைக்கபடும் போப் லியோ XIV வியாழக்கிழமை வாடிகனில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் பால்கனியில் தோன்றினார். ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் 267வது போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இல்லினாய்ஸின் சிகாகோவைச் சேர்ந்த 69 வயதான பிரீவோஸ்ட், அமெரிக்காவிலிருந்து வந்த முதல் போப் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் லியோ XIV என்று அழைக்கப்படுவார்.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?