WHO : coronavirus : 2020, 2021ம் ஆண்டுகளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நேரடியாகவோ அல்லது சுகாதாரத்துறையின் சார்பில் போதுமான வசதிகள் இல்லாததால் மறைமுகமாகவோ 47 லட்சம் பேர் உயிரிழந்திருக்கலாம். உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் இந்த அளவு உயிரிழப்பு ஏற்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020, 2021ம் ஆண்டுகளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நேரடியாகவோ அல்லது சுகாதாரத்துறையின் சார்பில் போதுமான வசதிகள் இல்லாததால் மறைமுகமாகவோ 47 லட்சம் பேர் உயிரிழந்திருக்கலாம். உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் இந்த அளவு உயிரிழப்பு ஏற்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுப்பு
ஆனால், உலக சுகாதார அமைப்பு கணக்கிட்ட முறை தவறு.கொரோனாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளை கணக்கீடு செய்ய எடுத்துக்கொண்ட கணக்கீடுமுறையும் தவறு என்று இந்தியா பலமுறை வலியுறுத்தியுள்ளது. தவறான கணக்கீடு முறையால்தான் இந்தியாவில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தெரிவித்த கவலைகள், கருத்துக்களை உலக சுகாதார அமைப்பு கருத்தில் கொள்ளவில்லை என மத்திய அரசு மறுத்துள்ளது.
அரசின் கணக்கு
இந்தியாவில் கொரோனாவில் 2020, 2021 டிசம்பர் வரை 4 லட்சத்து 81 ஆயிரத்து 486 பேர்தான் உயிரிழந்தார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டஉயிரிழப்பு எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் உலக சுகாதார மையத்தின் அறிக்கை என்பது 10 மடங்கு அதிகமாகும்.
ஆனால், உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி இந்தியாவில் 2020, 2021ம் ஆண்டுகளில் மட்டும் 47 லட்சத்து 40ஆயிரத்து 894 பேர் கொரோனாவில் நேரடியாகவோ அல்லது மருத்துவ வசதிகள் கிடைக்காமல் மறைமுகமாக இறந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. உலகளவில் 1.49 கோடிபேரிலிருந்து 1.66 கோடி பேர் வரை கொரோனாவில் தோராயமாக உயிரிழந்திருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது
காரணம்
அதிகப்படியான இறப்பு என்பது முந்தைய ஆண்டுகளின் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தொற்றுநோய் இல்லாத நிலையில் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கைக்கும் எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசமாக கணக்கிடப்படுகிறது.
கொரோனாவில் பாதிக்கப்பட்டு நேரடியாக உயிரிழந்தவர்கள் ஒருபக்கம் இருந்தாலும், கொரோனா தடுப்பு வழிகளை கடைபிடிக்க முடியாமலும், சிகிச்சை பெற முடியாமலும் ஏராளமானோர் உயிரழந்திருக்கலாம். அந்த நேரத்தில் நாடுமுழுவதும் கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால், சுகாதாரத்துறைக்கு கடும் நெருக்கடி அழுத்தம் இருந்திருக்கும்.
உலகளவில் கொரோனாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 84 சதவீத கூடுதல் இறப்புகள் தென்கிழக்கு ஆசியாவிலும், அமெரிக்காவிலும் நடந்துள்ளது. கூடுதல் உயிரிழப்புகளில் மூன்றில் இரு பங்கு உலகளவில் 10 நாடுகளி்ல்தான் நடந்துள்ளது.
ஆண்கள், பெண்கள்
உலகளவில் கொரோனாவில் உயிரிழந்தவர்களில் 57 சதவீதம் ஆண்கள், 43 சதவீதம்பேர் பெண்கள். இதில் வயதானவர்கள் உயிரழப்புதான் அதிகமாகும். ஆண்களில் 60வயது அதற்கு மேற்பட்டவர்கள் மட்டும் 2020ம் ஆண்டில் 5.30 லட்சம் பேரும், 2021ம் ஆண்டில் 19 லட்சம் பேரும் உயிரிழந்தனர். 2020ம் ஆண்டில் 60வயது மற்றும் அதிற்கு அதிகமான பெண்களில் 3.50 லட்சம் பேரும், 2021ம் ஆண்டில் 15 லட்சம் பேரும் உயிரிழந்தனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சுகாதார கட்டமைப்பில் முதலீடு
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் வெளியி்ட்ட அறிக்கையில் “இந்தியாவைப் பொறுத்தவரை நாங்கள் உயிரழப்பு குறித்த புள்ளிவிவரங்களை மாநில அரசுகள்பதிவு செய்த உயிரிழப்புகள், யூனியன் பிரதேசங்கள் பதிவு செய்தவை கணக்கில் எடுக்கப்பட்டன. இது தவிர மாநில அரசுகளிடம் இருந்து நேரடியாகப் பெற்ற விவரங்கள், பதிவேடுகள், பத்திரிகையாளர்கள் மூலம் தகவல் அ்றியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட விவரங்களைஅடிப்படையாக வைத்தே கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள், தொற்றுநோயின் தாக்கத்தை மட்டும் சுட்டிக் காட்டவில்லை., பேரிடர் நேரத்தில், தொற்று நோய் காலத்தில் அத்தியாவசிய சுகாதாரச் சேவைகள், போதுமான அளவு இருக்க வேண்டும், வலுவான சுகாதார தகவல் அமைப்புகள் இருக்க வேண்டும். அதில் அனைத்து நாடுகளுக்கும், முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. சிறந்த முடிவுகளை எடுக்கவும், சிறந்த விளைவுகள் ஏற்படவும் சிறந்த புள்ளிவிவரங்களை உருவாக்கவேண்டும். இதற்குத் தேவையான சுகாதார தகவல் கட்டமைப்பை வலுப்படுத்த உலக சுகாதார அமைப்பு உறுதி பூண்டுள்ளது” எனத்தெரிவித்தார்.
கூடுதல் இறப்புகள்
2020ம் ஆண்டுக்கான பிறப்பு மற்றும் இறப்பு பதிவேட்டை சிவில் பதிவேடு முறை(சிஆர்எஸ்) கடந்த செவ்வாய்கிழமை வெளியிட்டது. அதில் 2020, 2021ம் ஆண்டில் அனைத்து காரணங்களால் 4.75 லட்சம் பேர் கூடுதலாக இறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் இறப்புக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை, இறப்பு எண்ணிக்கை மட்டுமே தெரிவித்துள்ளது. அனைத்து காரணங்களில் 2020ம் ஆண்டில் 81.20 லட்சம் உயிரிழப்புகள் நடந்துள்ளன. ஆனால், 2020ம் ஆண்டில்கொரோனாவில் 1.49 லட்சம் பேர் மட்டுமே உயிரிழந்தார்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது. ஆனால், உலகசுகாதார அமைப்போ 8.20 லட்சம் பேர் கூடுதலாக இறந்ததாகத் தெரிவிக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் சார்பில் நேற்று நடந்த ஊடகத்தினர் சந்திப்பில் இந்திய அரசின் விமர்சனத்துக்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை. ஆனால், இந்திய அரசின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து ப ேசி வருகிறோம். இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் புதிய தரவுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை எனத் தெரிவி்த்தது