அந்த பெண் நடந்து கொண்ட விதம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. மேலும் இந்த சம்பவங்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மனதில் விரும்பிய நபரிடம் காதலை சொல்வது மிக கடினமான காரியம் என்பதை பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்வர். பலர் தனக்கு பிடித்தவர் இடம் காதலை வெளிப்படுத்தும் நிகழ்வை முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளுடன் விமரிசையாக செய்வர். சிலர் காதலரிடம் தனிமையில் காதலை வெளிப்படுத்திடுவர். மேலும் சிலர் சர்பிரைஸ் செய்கிறேன் பேர்வழி என்ற ரீதியில் காதலரிடம் அவர் துளியும் எதிர்பாராத தருணத்தில் புரோபோஸ் செய்வர்.
அந்த வகையில் நபர் ஒருவர் தனது காதலிக்கு மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் வைத்து காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். இதற்கு அந்த பெண் நடந்து கொண்ட விதம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. மேலும் இந்த சம்பவங்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மெக்டொன்ட்ஸ்-இல் புரோபோசல்:
தென் ஆப்ரிக்கா நாட்டில் உள்ள ஜொகானஸ்பர்க் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்த முடிவு செய்தார். அதன்படி காதலியிடம் புரோபோஸ் செய்ய மெக்டொனால்ட்ஸ் சிறப்பான இடமாக இருக்கும் என அவர் நினைத்தார். அதன்படி இருவரும் மெக்டொன்ட்ஸ் சென்றனர். அங்கு தனது காதலி வரிசையில் நின்று கொண்டு உணவு பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்தார்.
Witnessed such a sad situation today yoh 💔 pic.twitter.com/RPFvMS7bga
— ⭐️Certified Fixer⭐️ (@Madame_Fossette)கடையில் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில், யாரையும் துச்சமென கருதிய காதலன், வரிசையில் நின்று உணவு வாங்கிக் கொண்டு இருந்த காதலியிடம் திடீரென புரோபோஸ் செய்தார். இதனை சற்றும் எதிர்பாராத காதலி, அவரிடம் ஏதோ கூறுகிறார். இருவரும் சில நொடிகள் பேசிக் கொண்ட நிலையில், திடீரென காதலி மெக்டொனால்ட்ஸ்-ஐ விட்டு வெளியேறி விட்டார். சர்பிரைஸ் புரோபோசல் செய்த காதலர், தனது காதல் ஏற்கப்படாததை நினைத்து வருத்தத்தில் அதே இடத்தில் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார்.
வைரல் வீடியோ:
பின் சில நொடிகளில் அங்கிருந்து கிளம்பி சென்றார். நபரின் சர்பிரைஸ் புரோபோசல் நிகழ்வை மெக்டொனாட்ஸ்-இல் இருந்த பலர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வகையில் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை ஆயிரக் கணக்கானோர் லைக் செய்துள்ளனர். மேலும் இது பல லட்சம் வியூக்களை பெற்று இருக்கிறது.