இதய நோயால் பாதிக்கப்பட்டவருக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நிலையில் அந்த இதய பகுதியில் விலங்குகளுக்கான வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மனிதர்களுக்கு பன்றியின் இதயம்
இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளுக்காக காத்திருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மனிதர்கள் இறக்கின்றனர். இந்த நிலையை போக்க விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் ஆய்வு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குரங்கு உள்ளிட்ட மற்ற விலங்குகளை காட்டிலும் பன்றியின் உறுப்புகள் கிட்டத்தட்ட மனிதர்களின் உறுப்புகளை ஒத்திருப்பதால் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பொருத்தமானதாக உள்ளது. எனவே இதற்கான ஆராய்ச்சியில் பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி கிடைக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து பகுதியில் டேவிட் பென்னட் என்பவருக்கு கடந்த ஜனவரி மாதம் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பன்றியின் இதயத்தை அந்த நபருக்கு பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
undefined
இதய பகுதியில் புதிய வைரஸ்
இந்தநிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட அந்த நபர் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த நபருக்கு பொருத்தப்பட்ட இதய பகுதியை ஆராய்ச்சியாளர்கள் சோதனை நடத்தினர் அதில் பன்றியின் இதயத்திற்குள் டிஎன்ஏ போர்சின் சைட்டோமெகலோ வைரஸ் என்று அழைக்கப்படும் விரும்ப தகாத வைரஸ் தொற்று இருப்பதை கண்டறிந்துள்ளனர். இருந்த போதும் இந்த வைரஸ் தொற்று ஏற்படுத்துவதற்கான அறிகுறையை கண்டறியவில்லை என தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் மனிதர்களுக்கு விலங்குகளில் இருந்து உறுப்பு பொருத்துவது மூலம் புதிய வகையான தொற்றுகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் அபாயகரமான நிலை ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதி நவீன சோதனையில் ஆராய்ச்சியாளர்கள்
இருந்த போதும் இது போன்ற வைரஸ்களை கண்டறிய இன்னும் அதி நவீன சோதனை நடைபெற்று வருவதாகவும் xenotransplant திட்டத்தின் இயக்குனர் முகம்மது மொஹிடின் கூறியுள்ளார். இந்தநிலையில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் சிறிது நாட்கள் நல்ல உடல்நிலையில் இருந்த நிலையில் திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் சோதனை நடத்தியதில் பன்றியின் இதயம் வீங்கி, திரவத்தால் நிரம்பி இறுதியில் செயல்படாத நிலை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இருந்த போதும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.