2025 புத்தாண்டை முதலில் வரவேற்கும் நாடு எது? கடைசியாக வருது யார் தெரியுமா?

By SG Balan  |  First Published Dec 31, 2024, 7:12 PM IST

New Year Celebrations: உலகமே 2025ஆம் ஆண்டை வரவேற்க தயாராக இருக்கிறது. முதலில் கிறிஸ்துமஸ் தீவில் புத்தாண்டு பிறக்கிறது. அதைத் தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை புத்தாண்டை வரவேற்க உள்ளன. கடைசியாக பேக்கர் மற்றும் ஹவ்லாண்ட் தீவுகள் புத்தாண்டை வரவேற்கும்.


2025ஆம் ஆண்டை வரவேற்க உலகம் தயாராக உள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் புத்தாண்டை வரவேற்கத் தயாராகி வருகின்றனர்.

2025ஆம் ஆண்டிற்கான தொடக்கம் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வெவ்வேறு நேரத்தில் நிகழும். பூமியின் சுழற்சி மற்றும் மாறுபட்ட நேர மண்டலங்களின் காரணமாக ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நேரங்களில் புத்தாண்டு பிறக்கிறது.

Tap to resize

Latest Videos

புத்தாண்டை வரவேற்கும் முதல் நாடு:

2025 ஆம் ஆண்டு முதலில் தொடங்கும் இடம் கிரிபட்டி குடியரசில் உள்ள கிறிஸ்மஸ் தீவு (கிரிடிமதி) ஆகும். இது பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவு. இந்தத் தீவில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கே புத்தாண்டு பிறந்துவிடுகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு, நியூசிலாந்தின் சாதம் தீவு மக்கள் 3.45 மணிக்கு புத்தாண்டை வரவேற்பார்கள். அதைத் தொடர்ந்து நியூசிலாந்தின் முக்கிய நகரங்களான ஆக்லாந்து, வெலிங்டன், ஆகியவற்றில் மாலை 4.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கும்.

2025 ஜனவரி 1 முதல் பிறக்கப்போகும் பீட்டா தலைமுறை! ரெடியாக இருக்கும் சவால்கள்!

பசிபிக் பிராந்தியத்தில், டோங்கா, சமோவா மற்றும் பிஜி ஆகியவை இணைந்து உற்சாகத்துடன் புத்தாண்டைக் கொண்டாட்ட உள்ளன. இந்த நாடுகள் நியூசிலாந்தில் புத்தாண்டு தொடங்கிய அடுத்த சில நிமிடங்களுக்குப் பிறகு புதிய ஆண்டை வரவேற்கின்றன. நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து மற்றும் வெலிங்டன் போன்ற நகரங்களைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன் மற்றும் கான்பெர்ரா ஆகியவை இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு வானவேடிக்கைகளுடன் புத்தாண்டைக் கொண்டாடும்.

தென்கிழக்கு ஆசியா:

ஜப்பான், தென் கொரியா, வட கொரியா ஆகியவை இரவு 8.30 மணி மணிக்கு புத்தாண்டுக் கொண்டாட்டங்களைத் தொடங்கும். சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரில் நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிடும்.

அடுத்து இந்தோனேஷியா, தாய்லாந்து, மியான்மர் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் புதிய ஆண்டு பிறக்கும். அதைத் தொடர்ந்து வங்கதேசம், நேபாளம் ஆகியவை புத்தாண்டை வரவேற்கும். அதைத் தொடர்ந்து இந்தியாவும் இலங்கையும் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்கும். சிறிது நேரத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவையும் கொண்டாட்டத்தில் இணையும்.

கடைசி நாடு:

புத்தாண்டை வரவேற்கும் கடைசி நாடு ஹவாயின் தென்மேற்கே அமைந்துள்ள மக்கள் அதிகம் வசிக்காத பேக்கர் மற்றும் ஹவ்லாண்ட் தீவுகள்தான். 2025ஆம் ஆண்டை கடைசியாக வரவேற்கும் இந்தத் தீவுகள் இந்திய நேரப்படி ஜனவரி 1ஆம் தேதி மாலை 5.30 மணிக்குத்தான் புத்தாண்டைப் பார்க்கும்.

சாட்ஜிபிடி போன்ற AI சாட்பாட்களில் கேட்கவே கூடாத கேள்விகள்!

click me!