கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? ஒருவழியா விடை கிடைச்சிருச்சு!

By Manikanda Prabu  |  First Published Jun 16, 2023, 3:47 PM IST

கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்ற நீண்டகால கேள்விக்கான விடை கிட்டத்தட்ட கிடைத்து விட்டது


முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? காலங்காலமாக கேட்கப்பட்டு வரும் இந்த கேள்வி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள அனுபவமிக்க அறிஞர்களையும் குழப்பிய புதிராகவே இருந்தது. இந்த நிலையில், புதிய ஆய்வு ஒன்று இந்த கேள்விக்கான பதிலை கிட்டத்தட்ட நெருங்கி விட்டது. நிலத்திலும், நீரிலும் வாழும் உயிரினங்கள் மற்றும் பல்லிகள் பற்றிய ஆய்வின் அடிப்படையில் இதற்கான பதில் கிடைத்துவிட்ட நம்பிக்கையில் விஞ்ஞானிகள் உள்ளனர்.

நவீன கால ஊர்வன, பறவைகள் மற்றும் பாலூட்டிகளின் மூதாதையர்கள் முட்டையிடுவதற்குப் பதிலாக குட்டிகளை பெற்றெடுத்திருக்கலாம் என அந்த ஆய்வு கூறுகிறது. 51 புதைபடிவ இனங்கள் மற்றும் 29 உயிரினங்களை பகுப்பாய்வு செய்து அந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

கடினமான அல்லது மென்மையான ஓடுகள் கொண்ட முட்டைகளை இடும் உயிரினங்களாக oviparous உயிரினங்கள் அறியப்படுகின்றன. அதேபோல், இளம் குட்டிகளை ஈன்றெடுக்கும் உயிரினங்களாக viviparous உயிரினங்கள் அறியப்படுகின்றன. அதன்படி, இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட உயிரினங்கள் முட்டையிடும் உயிரினங்கள் (oviparous) மற்றும் குட்டிகளை ஈன்றெடுக்கும் உயிரினங்கள் (viviparous) என வகைப்படுத்தப்பட்டன. இந்த புதிய கண்டுபிடிப்புகள் நேச்சர் எக்காலஜி & எவல்யூஷன் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

கிளாடிஸ்டிக் கொள்கைகளின்படி, ஒரு பொதுவான மூதாதையரிடம் இருந்து உருவானதாக நம்பப்படும் உயிரினங்களின் குழுவான அழிந்துபோன கிளாடிஸ் கருமுட்டையின் தன்மை viviparous உயிரினங்களிடம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள சான்றுகளுடன், இவற்றையும் சேர்த்து நீட்டிக்கப்பட்ட கருவை தக்கவைத்தல் என்பது பழமையான இனப்பெருக்க முறையாக இருந்திருக்கலாம் என பரிந்துரைப்பதாக விஞ்ஞானிகள் அந்த இதழில் குறிப்பிட்டுள்ளனர்.

நீட்டிக்கப்பட்ட கருவை தக்கவைத்தல் என்பது தாயின் கருக்களை வெவ்வேறு காலத்திற்கு நீடித்திருப்பதைக் குறிக்கிறது. உயிர்வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் மிகவும் சாதகமாக இருக்கும் நேரத்தைப் பொறுத்து கருவை தக்க வைத்தல் என்பது மாறுபடலாம் என கூறப்பட்டுள்ளது.

கருவளர்ச்சியின் போது, ஆம்னியான், ஆலன்டாய்ஸ் கோரியான் மற்றும் கருவுணவுப்பை போன்ற கருசூழ் படலங்கள் உருவாகும் ஊர்வன விலங்குகளாக அறியப்படும் ஆம்னியோட்டுகள் (amniotes) தோன்றுவதற்கு முன்பு, பாலூட்டிகள், பறவைகள், மீன்கள், நீர்-நில வாழ் உயிரினங்கள்போன்ற முதுகெலும்பு வரிசை கொண்ட இனங்கள் (vertebrates) கரு வளர்ச்சிக்கு உட்பட்டன. மீன் போன்ற துடுப்புகளிலிருந்து கைகால்களை உருவாக்கிய முதல் டெட்ராபாட்கள் என்று அழைக்கப்படும் முதுகெலும்பு உள்ள குறிப்பாக மீன்களை விட பெரிய நான்கு கால் இனங்களின் (அனைத்து vertebrates-யையும் உள்ளடக்கிய குழு) பழக்கவழக்கங்களில் முக்கியமாக நீர் - நிலங்கள் இருந்தன என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தற்போதைய நீர் - நில உயிரினங்களான தவளைகள், சாலமண்டர்கள் போன்று, உணவளிப்பதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் அவை தண்ணீரிலோ அல்லது அருகிலோ வாழ வேண்டியிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை - சிபிஐ என்ன வித்தியாசம்? சக்திவாய்ந்ததாக அமலாக்கத்துறை உருவாக என்ன காரணம்?

“320 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அம்னியோட்கள் தோன்றியபோது, நீர்ப்புகா தோல் மற்றும் நீர் இழப்பைக் கட்டுப்படுத்தும் பிற வழிமுறைகளை உருவாக்குவதன் மூலம் அவை தண்ணீருக்கு வெளியேயும் வாழ்ந்தன. அம்மோனியோடிக் உயிரினங்களின் முட்டை முக்கியமானது. அவை ஒரு குளம் போன்று செயல்பட்டது. கரு வளரும் காலங்களில் வெப்பமான காலநிலையில் அவை வறண்டு போகாமல் பாதுகாக்கிறது. எனவே, அவற்றால் நீரிலிருந்து விலகி நிலப்பரப்பிலும் ஆதிக்கம் செலுத்த முடிந்தது.” என்று பிரிஸ்டல் ஸ்கூல் ஆஃப் எர்த் சயின்ஸின் பேராசிரியர் மைக்கேல் பென்டன் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், பல பல்லி இனங்கள் மற்றும் பாம்புகள் இரண்டு வகையான இனப்பெருக்க உத்திகளைக் கையாள்கிறது. அவை குட்டியும் ஈன்றெடுக்கிறது, முட்டையும் இடுகிறது என்பதால் அவை ஆராச்சியாளர்களுக்கு சவால் நிறைந்தவையாக உள்ளன. ஆனால், பெரும்பாலான இந்த இனங்கள் Livebearers எனும் மீன்கள் இனத்தை சேர்ந்தவை என ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட புதைபடிவங்கள் வெளிப்படுத்தியுள்ளன. எனவே, இது குட்டிகளைப் பெற்றெடுப்பதற்கும் முட்டையிடுவதற்கும் இடையிலான மாற்றத்தைக் குறிக்கிறது. Livebearers வகைகள் முட்டைகளை உடலுக்குள் தக்க வைத்து குட்டிகளை ஈன்றெடுக்கும் வகையை சார்ந்தவை. 

“நீட்டிக்கப்பட்ட கருவை தக்கவைத்தல் என்பது இன்று பல்லிகள் மற்றும் பாம்புகளில் பொதுவானது மற்றும் மாறக்கூடியது. அவற்றின் குஞ்சுகள், முட்டையில் இருந்தோ அல்லது அதற்கு முந்தைய நிலையான லார்வா போன்று வெவ்வேறு வளர்ச்சி நிலைகளிலோ வெளிப்படலாம். தாய்களுக்கு நீட்டிக்கப்பட்ட கரு தக்கவைப்பு என்பது வெப்பநிலை, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பொருத்து மாறுபடலாம்.” என்று மருத்துவர் ஜோசப் கீட்டிங் தெரிவித்துள்ளார்.

ஆராய்ச்சியின் முடிவுகள் இன்னும் முழுமையாக நிறுவப்படவில்லை என்றாலும், தகவமைப்பின்படி, ஆரம்பகால விலங்குகளுக்கு பெற்றோரின் பாதுகாப்பு நன்மையை வழங்கியிருக்கலாம் என ஆராய்ச்சி குழு பரிந்துரைக்கிறது.

click me!