மேடையில் மோடியை விமர்சித்த பாக் அமைச்சருக்கு கரண்ட் ஷாக்...!!! மோடின்னா ஷாக்...! மோதினால் என்னவாகும் பாக்...! பீதியில் உளறிய அமைச்சர்..!!

By Asianet Tamil  |  First Published Aug 30, 2019, 5:59 PM IST

அவரின் பேச்சால் அங்கிருந்தவர்கள் அவரை வித்தியாசமாக பார்த்தனர்.  அவர் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. மோடியைப் பற்றி பேசினாலே மின்சாரம் பாய்கிறது என்றால் இந்தியாவிடம் வாலாட்டினால் பாகிஸ்தானின் நிலை என்னவாகும் எண்ணிப்பாருங்கள் என்று அந்த வீடியோவிற்கு கமெண்ட் அடித்து வருகின்றனர். 


பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் மோடியை கண்டித்து மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே அவரை திடீரென்று மின்சாரம் தாக்கியது. அதற்கு மோடி அவர்களே நீங்கள் என்ன சதி செய்தாலும் இந்த கூட்டத்தை தடுக்க முடியாது என்று அவர் வீராவேசமாக பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

நம்மூரில் வாயைக்கொடுத்து வகையாய் மாட்டிக்கொள்ளும் சில அரசியல்வாதிகளைப்போல ,பாகிஸ்தானிலும் அரசியல்வாதிகள் உண்டு. அதற்கு சிறந்த உதாரணம் அந்நாட்டு இரயில்வேத்துறை அமைச்சர் ஷேக் ரஷீது அகமதுதான்,  சர்ச்சைக் கருத்துகளுக்குப் பெயர் போனவர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்புகூட இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் உச்சகட்ட போர் நடக்கும் என்றும்  அதுவே இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையேயான கடைசிப் போராக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

Latest Videos

அத்துடன் காஷ்மீருக்காக அணு ஆயுதத்தைப் பயன்படுத்தவும் பாகிஸ்தான் தயங்காது என அவர் எச்சரித்திருந்தார் இந்த நிலையில் நேற்று இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலத்துகொண்டவர் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கி இந்தியா காஷ்மீரை தன்னுடன் இணைத்துக்கொண்டதை அவர் கண்டித்து பேசினார்.

அப்போது "உங்களின் நோக்கம் என்னவென்று எங்களுக்குத் தெரியும் மோடி" என்று கூறினார். அவ்வாறு பேசும்போதே  தன் மீது லேசான அளவில் மின்சாரம் பாய்ந்ததை அவர் உணர்ந்தார்.உடனே, "மின்சாரம் தாக்கியது என நினைக்கிறேன். என்று கூறிய அவர் பிரதமர் மோடி அவர்களே நீங்கள் என்ன செய்தாலும் இந்தக் கூட்டத்தை தடுக்க முடியாது" எனப் பேசினார். அவரின் பேச்சு அங்கிருந்தவர்களை அவரை வித்தியாசமாக பார்க்க வைத்தது அவர் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. மோடியைப் பற்றி பேசினாலே மின்சாரம் பாய்கிறது என்றால் இந்தியாவிடம் வாலாட்டினால் பாகிஸ்தானின் நிலை என்னவாகும் என்று எண்ணிப்பாருங்கள் என்று அந்த வீடியோவிற்கு கமெண்ட் அடித்து வருகின்றனர். 

click me!