இனியும் இந்தியா வாலாட்டினால் ஒட்ட நறுக்கி விடுவோம்... பாகிஸ்தான் பிரதமர் பகிரங்க மிரட்டல்..!

By Thiraviaraj RMFirst Published Aug 30, 2019, 4:58 PM IST
Highlights

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு  காஷ்மீர் விவகாரத்தில், மோடி அரசு ஏதாவது வில்லங்கம், செய்தால் பாகிஸ்தானும் கடும் பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என அநாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு  காஷ்மீர் விவகாரத்தில், மோடி அரசு ஏதாவது வில்லங்கம், செய்தால் பாகிஸ்தானும் கடும் பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என அநாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனக்கூறி சர்வதேச அளவில் உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தராமல் ஒதுங்கிக் கொண்டன. இதனால் விரக்தியடைந்த பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான மோசமான நடவடிக்கைகளிலும் சதி வேலைகளிலும் ஈடுபட முயற்சித்து வருகிறது. இம்ரான் கான் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக போர் அச்சுறுத்தலை உணர்த்தும் வகையில் பேசி வருகிறார். 

இதுகுறித்து பேசியுள்ள அவர், ’’பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விஷயத்தில், மோடி அரசு ஏதாவது செய்தால், பாகிஸ்தானும் பதிலடி கொடுக்க தயாராக உள்ளது. அணுசக்தி நாடுகளான இந்தியா - பாகிஸ்தான் போர் ஏற்பட்டால், அது முழு உலகையும் பாதிக்கும். காஷ்மீர் தீர்ப்புக்கான நேரம் வந்துவிட்டது. 

காஷ்மீர் குறித்து இந்தியாவுடன் பேசப்பட்டபோது, பயங்கரவாதம் குற்றம் சாட்டப்பட்டது. 370வது பிரிவை காஷ்மீரில் இருந்து நீக்கி இந்தியா மிகப்பெரிய தவறு செய்துள்ளது. பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக எங்கள் மீது குற்றம்சாட்டுவதற்கான வாய்ப்பை இந்தியா தேடிக்கொண்டு இருக்கிறது’’ என அவர் எச்சரித்துள்ளார். 

முன்னதாக, பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரது சந்திப்புக்கு பிறகு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ’இந்தியா எங்களை திவாலாக்க முயற்ச்சியில் ஈடுபட்டு உள்ளது’ என்று கூறியிருந்தார். 
 

click me!