தாலிபன்கள் சார்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தும் குழுவின் தலைவரான ஹக்கானி இதுகுறித்த வாக்குறுதியை அமெரிக்க தரப்பிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.நா தடை பட்டியலில் இருந்து தலிபான்கள் விரைவில் விடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தலிபான்- அமெரிக்கா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த தடையிலிருந்து தலிபான்கள் விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஐநாவுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி கூறுகையில், ஐநா தடை பட்டியல் குழுவானது எப்போதும் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும். ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி, முன்னேற்றம், பாதுகாப்பு, அமைதி பேச்சுவார்த்தை உள்ளிட்டவற்றில் இந்தியா அதிக அக்கறை கொண்டுள்ளதை ஐநா எப்போதும் கருத்தில் கொண்டிருக்கும்’’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறும் தினமான ஆகஸ்ட் 31ம் தேதிக்கு முன்னர் புதிய அரசு அமைப்பது பற்றிய எந்த அறிவிப்பையும் தாலிபான்கள் வெளியிடமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
தாலிபன்கள் சார்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தும் குழுவின் தலைவரான ஹக்கானி இதுகுறித்த வாக்குறுதியை அமெரிக்க தரப்பிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுவரை தற்போது இருக்கும் ராணுவம், மற்றும் பாதுகாப்புபடை அமைப்பைமாற்றப்போவதில்லை எனவும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்