உங்கள் அனைவரையும் நாங்கள் பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்வோம்.. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உறுதி.

By Ezhilarasan BabuFirst Published Aug 21, 2021, 11:39 AM IST
Highlights

வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க குடிமக்கள் நிச்சயம் வீட்டிற்கு பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என கூறினார். 

உங்கள் அனைவரையும் நாங்கள் பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்வோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் காபுலில் சிக்கித்தவிக்கும் அமெரிக்கர்களுக்கு உறுதி அளித்துள்ளார். தாலிபன்களிடமிருந்து, அமெரிக்கர்களையும் மற்றவர்களையும் மீட்க அமெரிக்கா பாரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும். விமான நிலையத்திற்கு வெளியே நிலவும் குழப்பமான சூழலுக்கு மத்தியில் அமெரிக்கர்களை பத்திரமாக மீட்டு வருவது மிகப்பெரிய சவாலான காரியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தாலிபன்கள் ஆட்சியின்கீழ் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதால் அந்நாட்டு மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். பல்வேறு நாடுகள் ஆப்கனில் உள்ள தூதரகங்களை மூடிவிட்டு தங்களது ஊழியர்களை நாட்டிற்கே திரும்ப அழைத்துச் செல்கின்றன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு யாரும் வெளியேறத் தேவையில்லை என்றும், ஆப்கன் மக்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது என்றும் மக்கள் இங்கு அச்சமின்றி வாழலாம் என்றும் ஷரியத் சட்டப்படி பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்றும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்..

ஆனாலும் அவர்களின் இந்த அறிவிப்பை மக்கள் நம்பத் தயாராக இல்லை, எனவே வெளிநாடுகளுக்கு தப்பிக்கும் நோக்கில் காபுல் விமான நிலையத்திற்கு மக்கள் கூட்டங் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.  அதே நேரத்தில் கூட்டத்தை கலைக்க தலிபான்கள் தூப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு அசாதாரன சூழல் நிலவி வருகிறது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகளும் ஆப்கனில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக காபுல் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியாக சூழலில் ஆப்கன் மக்களை ஜோ பிடன் தவிக்க விட்டு விட்டார் என்றும்,  அமெரிக்க மக்களை தலிபான்களிடம் இருந்து உடனே மீட்க வேண்டும் என்றும் அவருக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  

வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க குடிமக்கள் நிச்சயம் வீட்டிற்கு பத்திரமாக அழைத்து வரப்படுவர் என கூறினார். ஆப்கனிஸ்தானில் சிக்கியிருக்கும் அமெரிக்கர்களே நான் உங்களுக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன், நான் உங்களை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வருவேன் என்றார். காபுல் விமான நிலையத்திலிருந்து தாலிபன்களிடமிருந்து அமெரிக்கர்களையும் மற்றவர்களையும் காப்பாற்ற அமெரிக்கா ஒரு பாரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது, விமான நிலையத்திற்கு வெளியே ஒரு குழப்பமான மற்றும் வன்முறை சூழல் நிலவுகிறது, இதில் மக்கள் பாதுகாப்பாக உள்ளே செல்ல சிரமப்படுகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் அமெரிக்கர்களுக்கு நம்பிக்கையூட்டும்படி கூறியுள்ளார்.
 

click me!