இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்ற முக்கிய தலிபான் தலைவர்.. ஷேர் முகமது அப்பாஸ் குறித்து பகீர் தகவல்..

By Ezhilarasan Babu  |  First Published Aug 21, 2021, 9:32 AM IST

தலிபான்களின் முக்கிய தலைவர்களின் ஒருவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக் ஜாய் கடந்த 1982ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் பயிற்சிப் பெற்றவர் என தகவல் வெளியாகி உள்ளது.


தலிபான்களின் முக்கிய தலைவர்களின் ஒருவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக் ஜாய் கடந்த 1982ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் பயிற்சிப் பெற்றவர் என தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டானிக்ஜாய் 20 வயதில் ஆப்கன் ராணுவ வீரராக இந்தியாவில் பயிற்சி பெற்றவர் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது அடுத்து ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ளதால் அவர்களது ஆட்சியின் கீழ் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என கூறி ஏராளமான ஆப்கான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் ஆட்சி நிர்வாகத்தை கட்டமைக்கும் பணியில் தலிபான்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயக முறைப்படி அல்லாமல் ஷரியத் சட்டப்படி  மூன்று பேர் கொண்ட கவுன்சிலால் ஆட்சி நிர்வகிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் 7 தலைவர்களின் மிக முக்கியமானவராக கருதப்படும் ஷேக் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்றவர் என தகவல் வெளியாகி உள்ளது. 1971ஆம் ஆண்டு முதல் டேராடூனில் அமைந்துள்ள இந்திய ராணுவ அகாடமி ஆப்கான் ராணுவ வீரர்களுக்கு நல்லெண்ண அடிப்படையில் பயிற்சி கொடுத்து வருகிறது. அப்போது ஆப்கனிஸ்தான் ராணுவ வீரராக 1982 ஆம் ஆண்டு டேராடூன் ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சிக்காக சேர்ந்தவர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய். இந்தியாவில் அனைத்து விதமான ராணுவ பயிற்சிகளையும் கற்றுத் தேர்ந்து அவர் ரஷ்யா ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபோது ரஷ்யாவுக்கு எதிராக ராணுவத்தில் இருந்து விலகி, தலிபான்களுடன் சேர்ந்துள்ளார். 

பின்னர் 1977 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியில் அவரது ஆங்கிலப் புலமையைக் கண்ட தலிபான்கள் அவரை வெளியுறவு அமைச்சராக நியமித்தனர். அப்போதைய தலிபான்களின் அரசை அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சராக விஜயம் செய்தவர் ஆவார். பின்னர் அவர் சீனாவுக்கும் அதே காரணத்திற்காக பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போதுள்ள தலிபான்களின் முக்கிய ஏழு தலைவர்களில் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் முக்கியமானவராக கருதப்படுகிறார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சதுர்வேதி ஷேர் முகமது அப்பாஸ்வுடன் டேராடூனில் பயிற்சி பெற்ற அனுபவத்தை பகிர்ந்துள்ளார். முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய், நல்ல மணிதர்,  அப்போதே ஸ்டாலின் ஜாய் மற்ற வீரர்களை காட்டிலும் மிகுந்த முதிர்ச்சியுடன் செயல்படுவார் என்றார். அவரது மீசைஅனைவரையும் கவரக்கூடிய வகையில் இருந்தது என்றார். அதேபோல், அப்போது அவரிடத்தில் எந்தவிதமான தீவிர கருத்துக்களும் இல்லை, அவர் இந்தியாவில் பயிற்சி பெற்ற போது  அவர் ரிஷிகேஷில் கங்கையில் நீராடினார். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என கூறிய ஓய்வுபெற்ற கர்னல் கே சர்ச்சிங் செகாவத் குழுவாக நீராடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
 

click me!