உலகை உலுக்கிய லண்டன் தீ விபத்து - மாயமான 60 பேரின் நிலை என்ன???

Asianet News Tamil  
Published : Jun 17, 2017, 11:19 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
உலகை உலுக்கிய லண்டன் தீ விபத்து - மாயமான 60 பேரின் நிலை என்ன???

சுருக்கம்

what happened to 60 missing people in london fire

லண்டன் அடுக்குமாடி கட்டட தீ விபத்தில், குழந்தைகள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை 100-ஐ தொடும் என அஞ்சப்படுகிறது. 

லண்டனின் லட்டிமர் சாலையில் உள்ள கிரென்பெல் டவர் என்ற 24 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு கட்டடத்தில், திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்த தீயை, 200-க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் போராடி அணைத்தனர். 

இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்த நிலையில், தற்போது, கருகி காட்சியளிக்கும் கட்டடத்தில் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இவ்விபத்தில், குழந்தைகள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை 100-ஐ தொடும் என அஞ்சப்படுகிறது. 

இதனிடையே, விபத்துக்குள்ளான கட்டடத்தை பார்வையிட வந்த லண்டன் மேயர் Sadiq Khan-ஐ குடியிருப்புவாசிகள் ஆத்திரத்துடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

PREV
click me!

Recommended Stories

சிரியா மசூதியில் பயங்கரம்! தொழுகையின் போது நடந்த கொடூர தாக்குதல்.. 8 பேர் உடல் சிதறி பலி!
கொடூரம்.. தொழுகையில் ஈடுபட்ட பாலஸ்தீனியர் மீது வாகனத்தை ஏற்றிய இஸ்ரேலிய வீரர்!