தனி மாநிலம்கோரி டார்ஜிலிங்கில் போராட்டம் - கல்வீச்சு, தீவைப்பால் பெரும் பரபரப்பு

Asianet News Tamil  
Published : Jun 15, 2017, 04:21 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
தனி மாநிலம்கோரி டார்ஜிலிங்கில் போராட்டம் -  கல்வீச்சு, தீவைப்பால் பெரும் பரபரப்பு

சுருக்கம்

Fight for a separate state in Darjeeling - Furore fire kept stone thrown

மேற்குவங்காள மாநிலம், டார்ஜிலிங்கில் தனி மாநிலம் கேட்டு போராடிவரும்,  கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் வீட்டில் போலீசார் நேற்று ரெய்டு நடத்தி 300-க்கும் மேற்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

இதனால், போலீசாரும், ஆர்பாட்டக்காரர்களும் ஒருவொருக்கொருவர் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர், வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டது.

தனி மாநில கோரிக்கை

மேற்குவங்க மாநிலத்தில் மலைப் பகுதியான டார்ஜிலிங், கலிம்போங் மற்றும் குர்சியாங் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய பகுதியை கூர்காலாந்து மாநிலமாக அறிவிக்கக் கோரி கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) அமைப்பினர்  தலைமையில் 6 அமைப்பினர் இணைந்து,  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த 12-ம் தேதி முதல் காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஜிஜேஎம் அழைப்பு விடுத்தது.

சுற்றுலாபாதிப்பு

இதனால் டார்ஜிலிங் மலைப்பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவி, பதற்றம் ஏற்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் இந்த நேரத்தில் அங்கு போராட்டம் தீவிரம் அடைந்து இருப்பதால், மாநிலத்தின் சுற்றுலா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ரெய்டு

இந்நிலையில், கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் பிமல் குருங் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கிவைப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து, அங்கு நேற்று அதிகாலை வீட்டில் நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பிமல் குருங் இல்லை. 

அப்போது பிமல் வீட்டில்  கூர்மையான ஆயுதங்கள், கத்திகள், வில், அம்புகள், பேஸ்பால் மட்டைகள் மற்றும் வெடி பொருட்களை கைப்பற்றியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

மோதல் கல்வீச்சு

இதனால் ஜிஜேஎம் ஆதரவாளர்கள் ஆத்தரமடைந்து, போலீசார் மீது தாக்குதல் நடத்தியதினர்.  முன்னெச்சரிக்கையாக அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸார் ஜிஜேஎம் ஆதரவாளர்ளை விரட்டியடித்தனர். அப்போது ஆவேசமடைந்த சிலர் போலீஸார் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு, வாகனங்களுக்கு தீவைத்தனர்.  இதனால், போலீஸார், துணை ராணுவப்படையினர் பதற்றமான பகுதிகளில் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நசுக்க முயற்சி

இதுகுறித்து கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) அமைப்பின் பொதுச் செயலாளர் ரோஷன் கிரி கூறுகையில், “ இப்போது உருவாகி இருக்கும் பதற்றமான சூழலை உருவாக்கி இருப்பது மாநில அரசுதான். மிகப்பெரிய போலீஸ் படையை வைத்து எங்களை நசுக்க மாநிலஅரசு முயற்சிக்கிறது.

முறையிடுவோம்

மாநில அரசுகளின் அடக்குமுறைகள் குறித்து மத்திய அரசிடம் முறையிட்டு தலையிடுங்கள் என்வு கூறப்போகிறோம். இன்று(நேற்று) முதல் காலவரையற்ற கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளோம்.

பொய் வழக்கு

எங்கள் தலைவர் வீட்டில் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றியதாக போலீசார் கூறுகிறார்கள். அம்புகளும், ஈட்டிகளும் எங்களின் பாரம்பரிய ஆயுதங்கள் இதை வைப்பதால்என்ன பிரச்சினை. எங்களின் தனி மாநில கோரிக்கையை ஏற்க முடியாமல், மாநிலஅரசும், போலீசாரும் எங்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்கிறார்கள்.’’ என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

சிரியா மசூதியில் பயங்கரம்! தொழுகையின் போது நடந்த கொடூர தாக்குதல்.. 8 பேர் உடல் சிதறி பலி!
கொடூரம்.. தொழுகையில் ஈடுபட்ட பாலஸ்தீனியர் மீது வாகனத்தை ஏற்றிய இஸ்ரேலிய வீரர்!