இந்தியா விசுவாசமாக இருக்கும் என நம்புகிறோம்.. சூழ்நிலையை சிக்கலாக்காதீங்க.. மோடியில் வருகையால் கதறும் சீனா..!

By Thiraviaraj RM  |  First Published Jul 4, 2020, 11:26 AM IST

எல்லை விரிவாக்கம் பற்றிய மோடியின் பேச்சைக் குறிப்பிட்டு இது, தான் தோறித்தனமான பேச்சு என்று விமர்சித்துள்ளது.
 


பிரதமர் மோடி திடீரென லடாக் பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களை சந்தித்து உற்சாகமூட்டியது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அப்போது வீரர்களிடையே பேசிய மோடி, ‘’எல்லை விரிவாக்க காலம் எல்லாம் ஓய்ந்து விட்டது. இனி இது வளர்ச்சிக்கான காலம்தான்’’ என கூறினார். மோடியின் இந்தப் பேச்சை உதாசீனப்படுத்தியுள்ள சீனா, ‘எதிராக ராஜாங்க உறவுகளில் தப்பு கணக்கு போட வேண்டாம். எல்லை விரிவாக்கம் பற்றிய மோடியின் பேச்சைக் குறிப்பிட்டு இது, தான் தோறித்தனமான பேச்சு என்று விமர்சித்துள்ளது.

இதுகுறித்து, சீன வெளியுறவு அமைச்சர் ஷாவோ லிஜியன், ‘’சீனாவுக்கு எதிரான தவறான கணக்குகளைப் போட வேண்டாம். இரு நாட்டு தலைவர்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தை இந்தியா விசுவாசமாக பின்பற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். இரு நாடுகளும் இணைந்து எல்லையில் அமைதியை ஏற்படுத்த முயற்சிப்பதே நல்லது. இந்தியாவும், சீனாவும் பெரிய வளரும் நாடுகள் எனும் பட்சத்தில் தேச வளர்ச்சி மற்றும் புத்துருவாக்கம் என்கிற பணிகளில் இருநாடுகளும் இருப்பதுபோன்று இருநாட்டு உறவுகளையும் பாதிக்குமாறான பொருளாதார விவகாரத்தில் சமீபத்திய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவது தேவையற்றது.

Tap to resize

Latest Videos

இருதரப்பு உறவுகளை செம்மைப் படுத்தும் விதமாக இருநாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்த ஒத்துழைப்புக்கு இடையிலான செயற்கையான முட்டுக்கட்டைகள் மூலமாக, உலக அமைப்பின் விதிமுறைகளை மீறுவது இந்தியாவின் நலன்களையும் பாதிக்கும். தங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்க சீனா அடைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதுமட்டுமல்லாமல் எல்லையில் இந்தியா சூழ்நிலையை மேலும் சிக்கலாகி விட்டது. சீனாவும், இந்தியாவும் ராணுவம் மற்றும் ராஜ்ஜிய வழிகளின் மூலமாக தொடர்பில் இருக்கும் நாடுகள். இரு நாடுகளுமே எல்லையில், சூழ்நிலை சிக்கலாகும் விதமாக நடந்து கொள்வது தேவையற்றது’’என்று அவர் கூறியுள்ளார். 

டெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், தனது 14 அண்டை நாடுகளுடனான எல்லையில் 12 நாடுகளின் எல்லையை சீனா அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துள்ளது. சில எல்லைகளை நட்புரீதியான ஒற்றுமை மற்றும் பிணைப்புகளாக மாற்றி உள்ளது. ஆகவே, எல்லை விரிவாக்கத்திற்காக சீனா முயற்சிப்பதாகக் கூறுவது என்பது மிகைப்படுத்தப்பட்ட பேச்சு’’என்று விமர்சித்தார்.
 

click me!