#UnmaskingChina:இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஜப்பான்..!! உச்ச கட்ட கலக்கத்தில் சீனா..!!

By Ezhilarasan Babu  |  First Published Jul 4, 2020, 11:02 AM IST

இருநாட்டு எல்லை விவகாரத்தை இருநாடுகளும் அமைதியான பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வர் என நம்புகிறோம். அதையே ஜப்பான் விரும்புகிறது


இந்திய-சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அமைதியான முறையில்  தீர்க்கப்படும் என்ற தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், அதே வேலையில் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் நிலைமையை மாற்றுவதற்கான எந்த ஒரு முயற்சியையும் எதிர்ப்பதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது. இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது ஜப்பானும் இந்தியாவுக்கு  தனது ஆதரவை தெரிவித்துள்ளதுடன் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்தியா-சீனா இடையே கடந்த ஏழு வாரத்திற்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. ஜூன்-15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்திய வன்முறை தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் இச்சம்பவத்தை அடுத்து இரு நாட்டுக்கும் இடையே பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

ஒருபுறம் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தைகள்  நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் சீனா தொடர்ந்து எல்லையில் ராணுவத்தை குவித்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும்  போர் வெடிக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா-அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடங்கிய குவாட் உறுப்பினர்களில் ஜப்பானும் அங்கமாக உள்ளது, இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதுடன் தனது போர்க் கப்பல்களையும் தென்சீனக் கடல் பகுதியை ஒட்டி நிலை நிறுத்தியுள்ளது. அதேபோல் ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள தனது படைகளையும் ஆசியக் கண்டத்திற்கு இடப்பெயர்வு செய்ய முடிவு செய்துள்ளது. இப்படி இந்தியாவுக்கு அமெரிக்கா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் ஜப்பான் இந்தியாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதாவது இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் சிரிங்லாவை  இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் சடோஷி சுசுகி சந்தித்து பேசினார். 

அச்சந்திப்புக்குப் பிறகு சுசுகி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:- இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிரிங்கலா உடனான உரையாடல் நல்ல முறையில் இருந்தது எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் நிலவும் சூழல் குறித்து அவர் தன்னிடம் தெளிவாக எடுத்துரைத்தார், அதேபோல் அமைதியை நிலைநாட்ட இந்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். அதேபோல் இருநாட்டு எல்லை விவகாரத்தை இருநாடுகளும் அமைதியான பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வர் என நம்புகிறோம். அதையே ஜப்பான் விரும்புகிறது. அதேபோல் ஒருதலைப்பட்சமாக  தன்னிச்சையாகவும் ராணுவ நிலைகளை மாற்றும் எந்த முயற்சியையும் ஜப்பான் கடுமையாக எதிர்க்கிறது என தெரிவித்துள்ளார் ஏற்கனவே சீனாவுடன் ஜப்பானுக்கு மோதல் இருந்து வரும் நிலையில் தன்னுடைய நட்பு நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கு ஆதரவாக ஜப்பான் நிலைபாடு எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!