சிங்கப்பூரில் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இரு கட்டங்களாக தண்ணீர் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கன மீட்டர் தண்ணீர்க் கட்டணம் 50 காசு வீதம் உயர உள்ளது. இது தற்போதுள்ள கட்டணத்தைவிட 18% அதிகமாகும்.
சிங்கப்பூர் நாட்டின் தேசியத் தண்ணீர் அமைப்பான PUB ஒரு முக்கிய தகவலை வெளியுட்டுள்ளது. இதில், வரும 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இரு கட்டங்களாக தண்ணீர் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கன மீட்டர் தண்ணீர்க் கட்டணம் 50 காசு வீதம் உயர உள்ளது. இது தற்போதுள்ள கட்டணத்தைவிட 18% அதிகமாகும்.
சிங்கப்பூரில் தற்போது ஒரு கன மீட்டருக்கு தண்ணீரின் கட்டணம் 2.74 சிங்கப்பூர் டாலர் வசூலிக்கப்படுகிறது. தற்போது, ஏறிவரும் விலைவாசி, தண்ணீரைச் சுத்திகரித்து அதனை விநியோகம் செய்வதற்கான செலவுகள் உயர்த்த வேண்டி கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக PUB தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தண்ணீர் கட்டண விலையேற்றம் இரு கட்டங்களாக கொண்டுவரப்படும் என்று PUB தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம்! செப் 30 முதல் தொடக்கம்!
முதல் கட்டமாக அடுத்த ஆண்டில் (2024ல்) ஒரு கன மீட்டருக்கு -20 காசுகள் உயரும் (2.94 - சிங்கப்பூர் டாலர்) என்றும், 2025ல் ஏப்ரல் மாத்ததில், ஒரு கன மீட்டருக்கு -30 காசு உயரும் (3.24 - சிங்கப்பூர் டாலர்) என அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் அமைப்பான PUB இறுதியாக கடந்த 2017-ம் ஆண்டில் தண்ணீரின் விலையை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. அதிகரிக்க இருக்கும் இந்த தண்ணீர் கட்டணத்தை சமாளிக்க சிங்கப்பூர் அரசு கூடிய விரைவில் கூடுதல் நிதியுதவி திட்டங்களை அறிமுகப்படுத்தும் என்றும் PUB தெரிவித்துள்ளது.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D