சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம்! செப் 30 முதல் தொடக்கம்!

By Dinesh TG  |  First Published Sep 26, 2023, 6:19 PM IST

சிங்கப்பூரில் தீபாவளிப் பண்டிகைக்கான ஏற்பாடுகள் லிட்டில் இந்தியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, ‘ராதா - கிருஷ்ணா’ எனும் மைய கருப்பொருளுடன் தீபாவளி ஒளியேற்றம் செப்டம்பர் 30ம் தேதி பெர்ச் சாலையின் திறந்தவெளியில் நடைபெற உள்ளது.
 


இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகளை வரும் நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கிய பண்டியான தீபாவளி, பல்வேறு நாடுகளில் உள்ள இந்துக்களும் விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். சிங்கப்பூரில் அதிக இந்துக்கள் வாழும் பகுதியான லிட்டில் இந்தியாவில் தீபாவளி பண்டிக்கைக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு, ‘ராதா - கிருஷ்ணா’ எனும் மைய கருப்பொருளுடன் தீபாவளி ஒளியேற்றம் செப்டம்பர் 30ம் தேதி பெர்ச் சாலையின் திறந்தவெளியில் நடைபெற உள்ளது. இதனை இரவு 7.30 மணியளவில் சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தொடங்கி வைக்க இருக்கிறார்.

தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி, மொத்தம் 45 ஒளி வளையங்கள் சிராங்கூன் ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு உள்ளிட்ட சாலைகளில் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஒளிவளையங்கள் செப். 30ம் தேதி முதல் டிச 3ம் தேதி வரை இடம்பெறும். ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு விளக்குகள் ஏற்றப்படும். வார நாட்களில் நள்ளிரவு 12 மணி வரையிலும் (சனி ஞாயிறு ஆகிய) வார இறுதிநாட்களில் நள்ளிரவு 1 மணி வரையிலும் ஒளி வீசும். மேலும் நான்கு வெள்ளை குதிரைகளுடனான தங்க ரதம் ஒன்று பெர்ச் சாலையில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மகிழலாம்.

இந்த பிரம்மாண்டமான தீபாவளிச் சந்தையில் ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு மேடை நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தீபாவளிக் கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த ‘லிஷா’ குழுவினர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களை கவரும் வையில் பல்வேறு வண்ண வண்ண விழாக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Singapore Tamil | சிங்கப்பூரில் தமிழ் மொழியின் புழக்கம் குறைந்துவிட்டது! - அதிபர் தர்மன் கருத்து!


மேலும், புதிய முயற்சியாக இவ்வாண்டு ‘தேக்கா ராஜா’ எனும் யானை உருவ பொம்மை அக்டோபர் 14, 28, நவம்பர் 4, 11 ஆகிய தேதிகளில் சிராங்கூன் சாலையில் வலம் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். லிஷா குழு உருவாக்கியுள்ள இந்த உருவ பொம்மை ‘தடைகளை அகற்றுதல்’ எனும் மையக் கருத்தை பிரதிபலிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

தீபாவளி பண்டிகைக்கால உணர்வைத் தூண்டும் பல்வேறு உணவு வகைகள் சிங்கப்பூர் சந்தையில் விற்பனைக்கு இடம்பெறும் என்றும், பொதுமக்கள் உணவினை வாங்கி அங்கேயே உண்டு மகிழும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக லிஷா குழுவினர் தெரிவித்தனர்.

மேலும், பொதுமக்களைக் கவரும்வகையிலான புதிய முயற்சிகள் இவ்வாண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 50 லட்சம் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக லிஷா குழுவின் தலைவர் ரகுநாத் சிவா தெரிவித்தார்.

click me!