700 கார்கள், 58 விமானங்கள், 20 அரண்மனைகள் மற்றும் $200 பில்லியன் சொத்துக்களைக் கொண்ட உலகின் பணக்கார அரசியல்வாதி யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
டெஸ்லா நிறுவனம், எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இப்போது ஒரு அரசியல் தலைவர் எலான் மஸ்க்கின் சொத்துக்களுக்கு கடும் போட்டியை அளிக்கிறார். இந்த அரசியல் தலைவர் உலகின் பணக்கார அரசியல்வாதி என்று அழைக்கப்படுகிறார். இந்த அரசியல் தலைவரிடம் 700 கார்கள், 58 விமானங்கள், 20 அரண்மனைகள், 200 பில்லியன் டாலர் சொத்துக்கள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வருடத்திற்கு 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்.
பணக்கார அரசியல் தலைவர்
சம்பளம் உட்பட பல்வேறு ஆதாரங்களில் இருந்தும் தொடர்ந்து வருமானம் ஈட்டி வருகிறார். இந்தப் பணக்கார அரசியல் தலைவர் யார் என்பதை பார்ப்போம். மிகப் பணக்கார தலைவரின் பெயர் விளாடிமிர் புடின். ரஷ்யாவின் தலைவரான விளாடிமிர் புடின் பணக்கார அரசியல் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவ்வளவு மட்டுமல்ல, விளாடிமிர் புடின் உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். ரஷ்யாவின் தலைவரான புடின், ஆண்டுக்கு 1,40,000 டாலர் (சுமார் 1.17 கோடி ரூபாய்) சம்பளம் பெறுகிறார்.
ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டரில் ‘தமிழ் மொழி’.. டேஷ்போர்டை அறிமுகம் செய்து தரமான சம்பவம்!
விளாடிமிர் புடின்
2007 ஆம் ஆண்டில் அமெரிக்க செனட் நீதித்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, விளாடிமிர் புடின் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை அறிவித்துள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும் ஃபோர்ப்ஸ் கூட விளாடிமிர் புடினின் சொத்துக்களை சரிபார்க்க முடியவில்லை. எனவே புடினின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. சில அறிக்கைகளின்படி, அமேசான் நிறுவனர் பெசோஸ், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், ஓரக்கிள் நிறுவனர் லாரி எலிசன் மற்றும் பிரான்சின் பணக்காரரான பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோரை விட விளாடிமிர் புடின் பணக்காரர் என்று கூறப்படுகிறது.
900 கோடி மதிப்புள்ள படகு இல்லம்
அமெரிக்காவின் புகழ்பெற்ற "ஃபார்ச்சூன்" பத்திரிகையின் அறிக்கையின்படி, விளாடிமிர் புடினிடம் 20க்கும் மேற்பட்ட ஆடம்பர அரண்மனைகள், 700க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் உள்ளன. அவ்வளவு மட்டுமல்ல, 900 கோடி மதிப்புள்ள படகு இல்லமும் புடினிடம் உள்ளதாம். 60 ஆயிரம் முதல் 5 லட்சம் டாலர் வரை மதிப்புள்ள ஆடம்பர கைக்கடிகாரங்களை புடின் வைத்திருக்கிறார்.
22 பெட்டிகள் கொண்ட குண்டு துளைக்காத ரயில்
கருங்கடல் கடற்கரையில் 1,90,000 சதுர அடி பரப்பளவில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அரண்மனையை வைத்திருக்கிறார். இந்த வீட்டில் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், சினிமா அரங்கம், காசினோ உட்பட அனைத்து ஆடம்பர வசதிகளும் உள்ளன. இதனுடன் 22 பெட்டிகள் கொண்ட குண்டு துளைக்காத ரயிலையும் வைத்திருக்கிறார். இது கோஸ்ட் ரயில் என்றும் அழைக்கப்படுகிறது. அரண்மனையில் பதுங்கு குழிகளும் கட்டப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மிகவும் அசுத்தமான ரயில்கள் லிஸ்ட்.. தப்பித்தவறி கூட போயிடாதீங்க..