அமெரிக்காவில் பிறப்பு தொடர்பான குடியுரிமையை ஒழிப்பதற்கான டொனால்ட் டிரம்பின் சட்ட முயற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கூட்டாட்சி நீதிபதியால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் மற்றும் அவர்களின் குழந்தைகளின் குடியுரிமை பெறுவதை பாதிக்கும்.
அமெரிக்காவில் பிறப்பு தொடர்பான குடியுரிமையை ஒழிப்பதற்காக டொனால்ட் டிரம்பின் சட்ட ரீதியான முயற்சி தற்போது சட்டத்தாலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கூட்டாட்சி நீதிபதியால் தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த சட்டம் முக்கியத்துவம் பெறுகிறது என்று பார்க்கலாம்.
அமெரிக்காவில் பிறக்காமல் அங்கு பணிக்கு சென்று இருக்கும் வெளிநாட்டு வாழ் மக்களுக்கு குடியுரிமை இல்லை. அவர்கள் H1-B, H 4 போன்ற விசாக்களில் சென்று இருப்பார்கள். H1-B விசாக்களில் சென்றவர்கள் அங்கு பனி நிமிர்த்தமாக தங்களது நாடுகளில் இருக்கும் நிறுவனங்களால் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பவர்கள். அங்கு சென்ற பின்னர் பணியை மாற்றிக் கொள்கிறார்கள். இவர்களை சார்ந்து சென்று இருப்பவர்கள் H 4 விசாவில் சென்று இருப்பவர்கள். மாணவர்கள் F-1 விசா பெற்று அங்கிருக்கும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கின்றனர். J-1 எக்சேஞ்ச் விசா, L-1 இன்ட்ரா கம்பெனி டிரான்ஸ்பர்ஸ், L-2 டிபென்ட்டென்ஸ் , B-1 பிசினஸ் விசா, B-2 டூரிஸ்ட் விசா என்று பல விசாக்கள் அமெரிக்காவில் வழங்கப்படுகின்றன.
H 4 விசாவின் கீழ் சென்று இருப்பவர்கள் ஆட்சியாளர்களின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுகிறார்கள். ஒருமுறை H 4 விசாவில் சென்றவர்களும் அமெரிக்காவில் பணியில் சேரலாம் என்று சட்டம் கொண்டு வருவார்கள். மறுபக்கம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இவர்கள் பணி செய்யக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால், தற்போது அதிபர் டொனால்ட் டிரம்ப் திருத்தம் செய்து இருக்கும் சட்டம் அமெரிக்க குடியுரிமை சட்டம். இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்டு இருப்பது அமெரிக்க வாழ் இந்தியர்கள் மட்டுமில்லை. வேறு நாடுகளில் இருந்து சென்று இருப்பவர்களும் தான்.
தேர்தலின்போது அமெரிக்கர்களுக்கே அமெரிக்காவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும், குடியுரிமை சட்டம் மாற்றப்படும் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருந்தார். அதைத்தான் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றி இருக்கிறார். இருந்தாலும், 127 ஆண்டுகளுக்குப் பின்னர் திருத்தப்பட்டு இருக்கும் இந்த சட்டத்தால், தற்போது குறைப்பிரசவம் செய்யும் அளவிற்கு கர்ப்பிணிகள் சென்று இருக்கின்றனர்.
முந்தைய சட்டத்தில் அமெரிக்காவில் பணிக்கு சென்று இருக்கும் பெற்றோருக்கு அங்கு பிறந்த குழந்தையாக இருந்தாலும், அமெரிக்க குடியுரிமை கிடைக்கும். ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டு இருக்கும் சட்டத்தால், பணி நிமிர்த்தமாக சென்று இருந்து அங்கு குழந்தை பிறந்தாலும் குடியுரிமை கிடைக்காது. ஒன்று பெற்றோரில் இருவரில் ஒருவர் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது கிரீன் கார்டு பெற்றவராக இருக்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தில் AI பொறுப்பு ஏற்கும் தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணன் யார்?
இந்த சட்டத்திற்கு அமெரிக்கா வாழ் வெளிநாட்டினர் மட்டுமில்லை, அந்த நாட்டின் அட்டார்னி ஜெனரல்களே எதிர்ப்பு தெரிவித்து தடை விதித்துள்ளனர். 22 மாநிலங்களுக்கும் மேற்பட்ட அட்டர்னி ஜெனரல்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சியாட்டிலில் உள்ள கூட்டாட்சி நீதிபதி, நிர்வாக உத்தரவைத் தடுக்க ஒரு தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்து உள்ளார். டிரம்பின் சட்டத்தை "அப்பட்டமாக அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்யும் வாஷிங்டன், அரிசோனா, இல்லினாய்ஸ், ஓரிகான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகம் டிரம்பின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மனித உரிமைக்கு எதிரான சட்ட திருத்தம் இது என்று கூறி நீதிமன்றத்தில் தடை கோரி இருந்தனர்.
ஜனநாயகக் கட்சி தலைமையிலான நான்கு மாநிலங்களின் கோரிக்கையை மதித்து, அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜான் கோஃபெனூர், டிரம்ப் நிர்வாகம் இந்த உத்தரவை செயல்படுத்துவதைத் தடுத்து ஒரு தற்காலிக உத்தரவைப் பிறப்பித்தார். "நான் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அமர்வில் இருக்கிறேன். இந்தக் கேள்வி இவ்வளவு தெளிவாக முன்வைக்கப்பட்ட வேறு எந்த வழக்கிலும் எனக்கு நினைவில் இல்லை," என்று அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜான் கோஃபெனூர் நீதித்துறை வழக்கறிஞரிடம் கூறினார். "இது அப்பட்டமான அரசியலமைப்பிற்கு முரணான உத்தரவு" என்றும் கூறினார்.
நீதிபதி ஜான் கோஃபெனூரின் வாதத்தால் தற்காலிமாக டொனால்டின் சட்டத்திற்கு தடை விதித்தாலும், பிப்ரவரிக்குப் பின்னர் என்ன நடக்கும் என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.