வடகொரிய அதிபருக்கு 'ரஷ்ய ரோல்ஸ் ராய்ஸ்' காரை பரிசளித்த விளாடிமிர் புதின்! வலுவடையும் சர்வாதிகாரிகளின் நட்பு!

By SG BalanFirst Published Jun 19, 2024, 8:05 PM IST
Highlights

புடினும் இதே ஆரஸ் செனட் காரையே தனது ஜனாதிபதி வாகனமாக பயன்படுத்தி வருகிறார். இப்போது, அதே போன்ற புதிய காரை ​​நட்புப் பரிசாக கிம் ஜாங் உன்னுக்குக் கொடுத்திருக்கிறார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தடைகளை மீறியதாக குற்றம்சாட்டப்படும் வடகொரிய அதிபர்  கிம் ஜாங் உன்னுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் ஆரஸ் செனட் சொகுசுக் காரை காரை பரிசாக அளித்துள்ளார். இந்தக் கார் 'ரஷ்யாவின் ரோல்ஸ் ராய்ஸ்' என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வடகொரிய அதிபருடனான தனது நெருக்கமான நட்பை இந்த அன்பளிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். வட கொரிய தலைநகரான பியாங்யாங்கில் உள்ள அதிபர் கிம்முக்கு நெருக்கமான உயர் அதிகாரிகள் வசம் இந்த கார் ஒப்படைக்கப்பட்டது.

Latest Videos

புடினும் இதே ஆரஸ் செனட் காரையே தனது ஜனாதிபதி வாகனமாக பயன்படுத்தி வருகிறார். இப்போது, அதே போன்ற புதிய காரை ​​நட்புப் பரிசாக கிம் ஜாங் உன்னுக்குக் கொடுத்திருக்கிறார். இந்தக் கார் முதல் முதலில் புடின் கோரியதன் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கமுக்கமா இந்தியாவை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்கள்! எல்லாரும் போற நாடு எதுன்னு தெரியுமா?

ஆரஸ் செனட் 2018ஆம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் உலகத்தரமான சொகுசு கார் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று புடின் கூறினார். அதன்படி, அந்நாட்டு அறிவியல் ஆராய்ச்சி  மற்றும் ஆட்டோமோட்டிவ் இன்ஜின்கள் நிறுவனம் இந்தக் காரைத் தயாரித்தது.

செடான் ரகத்தைச் சேர்ந்த இந்தக் கார் 'ரஷ்யாவின் ரோல்ஸ் ராய்ஸ்' என்ற பெயரில் புகழ்பெற்றுள்ளது. ஸ்டாண்டர்ட் செனட், செனட் லாங் மற்றும் செனட் லிமோசின் என மூன்று வேரியண்ட்களில் இந்தக் கார் கிடைக்கிறது. இந்தக் கார் 590bhp ஆற்றலை வழங்கும் 4.4 லிட்டர் ட்வின்-டர்போ V8 என்ஜினைப் பயன்படுத்துகிறது.

ஜனாதிபதி பயன்படுத்தும் கார் என்பதால் காரின் உட்புறம் அனைத்து விதமான ஆடம்பரங்களும் இதில் உள்ளன. இருப்பினும், கிம்முக்கு டெலிவரி செய்யப்பட்ட காரில் உள்ள வசதிகள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

எதிர்காலத்தில் மொபைல் ஃபோனே இருக்காது; எல்லாமே எங்க நியூராலிங்க் தான்: எலான் மஸ்க் கருத்து

click me!