இஸ்ரேல் சிறுவனை துன்புறுத்தும் பாலஸ்தீன சிறுவர்கள்: வைரல் வீடியோ!

By Manikanda Prabu  |  First Published Oct 8, 2023, 6:50 PM IST

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட இஸ்ரேல் சிறுவனை பாலஸ்தீன சிறுவர்கள் துன்புறுத்துவதாக கூறும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது


இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் இடையே போர் மூண்டுள்ளது. கடுமையான பாதுகாப்பு அமைப்புகளை மீறி இஸ்ரேலுக்குள் புகுந்த பாலஸ்தீன் காசா பிராந்தியத்தின் ஹமாஸ் அமைப்பினர், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் அல்-அக் ஷா ஃபிளட்’ என ஹமாஸ் அமைப்பினர் பெயர் வைத்துள்ளனர்.

அதேபோல், காசா முனையில் ஹமாஸ் குழுவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேசன் அயர்ன் ஸ்வார்ட்ஸ்' பெயரில் இஸ்ரேலும் தாக்குதலை துவக்கியுள்ளது. இருதரப்பிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000ஐத் தாண்டியுள்ளது.

Tap to resize

Latest Videos

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல்: இஸ்ரேலியர்கள் உயிரிழப்பு 400ஆக அதிகரிப்பு!

இஸ்ரேலின் எல்லைகள் வழியாக ஊடுருவி, கடுமையான தாக்குதலை ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வருகின்றனர். மேலும், ராணுவ அதிகாரிகள் உள்பட பலரையும் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அந்த வகையில், இஸ்ரேலை சேர்ந்த யூத சிறுவன் ஒருவனை ஹமாஸ் அமைப்பினர் கடத்தி வைத்துள்ளதாக தெரிகிறது. அச்சிறுவனை, பாலஸ்தீன சிறுவர்கள் துன்புறுத்துவதாக கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது பார்ப்போர் கண்களை கலங்க வைக்கிறது.

 

Kids in Gaza Harass and bully and terrorize a Jewish child that was kidnapped by Hamas terrorists. pic.twitter.com/g5rGfnvQEt

— Megh Updates 🚨™ (@MeghUpdates)

 

முன்னதாக, இஸ்ரேல் பெண் ஒருவரை ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லையில் உள்ள காசா பகுதிக்குள் கொண்டு செல்லும்  காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பெண்ணின் ஆண் நண்பரையும் அவர்கள் அடித்து அழைத்து செல்கின்றனர். அந்தப் பெண் ‘என்னைக் கொன்றுவிடாதீர்கள்’ எனக் கதறும் காட்சிகள் காண்போரைப் பதறவைக்கிறது. அதேபோல், பெண் ஒருவரை நிர்வாணமாக்கி ஹமாஸ் அமைப்பினர் சித்திரவதை செய்யும் காட்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், பாலஸ்தீன தரப்பும் இஸ்ரேல் ராணுவத்தினரால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தற்போது உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். ஏராளமான பெண்களையும், குழந்தைகளையும் இஸ்ரேல் கொன்று குவித்த வரலாறும் உள்ளது. உலக போர் வரலாற்றின் பக்கங்களில் பெண்களும், பெண் குழந்தைகளும், ஒன்றும் அறியா குழந்தைகளும், சிறுவர், சிறுமியர்களும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

click me!