நிலநடுக்கத்தில் 2,053 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 9,240 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் ஆப்கானிஸ்தான் பேரிடர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. தொடர் நிலநடுக்கத்தில் 2,000 க்கும் அதிமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரசு தரப்பில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பேரிடர் அமைச்சகம் அளித்துள்ள தகவலின்படி, நிலநடுக்கத்தில் 2,053 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 9,240 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் 1,328 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
undefined
ஹமாஸ் - இஸ்ரேல் போர் மூண்டதால் மீண்டும் அப்படியே பலித்த நாஸ்டர்டாமஸ் கணிப்பு!
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி அளித்த அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி, "துரதிர்ஷ்டவசமாக, உயிரிழப்புகள் மிக அதிகமாகிவிட்டன... பலி எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது" என்று கூறியிருந்தார்.
ஹெராத் மாகாணத்தில் சனிக்கிழமையன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்குப் பின்பும் தொடர்ச்சியான சக்திவாய்ந்த நில அதிர்வுகள் ஏற்பட்டன.
ரஞ்சிதாவை பிரதமராக்கி பவரை பறிகொடுத்த நித்தியானந்தா! கைலாசாவை ரெண்டாக்கிய சிஷ்யைகள்!