ஜெனிவாவில் சிலம்பம் சுழற்றிய வைகோ!

Vaiko in Geneva
Vaiko in Geneva


மதிமுக பொது செயலாளர் வைகோ, ஜெனிவாவில் சிலம்பம் சுழற்றி அங்கிருப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

ஜெனிவாவில் நடந்துவரும் ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் இனப்படுகொலை செய்த இலங்கை ராணுவத்துக்கு எதிராகவும் வைகோ கலந்து கொண்டுள்ளார்.

Latest Videos

வைகோவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஐநா கூட்டத்திற்கு வந்திருந்த இலங்கையைச் சேர்ந்த சிலர், வைகோவை சூழ்ந்துகொண்டு மிரட்டினர். இனப்படுகொலை செய்த ராணுவத்தினரில் சிலரும் அந்த கூட்டத்தில் இருந்ததாக வைகோ தெரிவித்திருந்தார். 

வைகோ மிரட்டப்பட்டதை அடுத்து அவருக்கு ஐநா பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கியது.
இந்த நிலையில் ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள வைகோ, ஜெனிவா நகர வீதிகளில் கூடாரம் போட்டு, ஈழ படுகொலைக் குறித்த புகைப்பட கண்காட்சியை அமைத்துள்ளார்.

இந்த புகைப்பட கண்காட்சிக்காக வைகோ, நாள்தோறும் கூடாரம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். பின்னர் இரவு பொழுதில், கூடாரத்தை அகற்றும் பணியில் ஈடுபடுகிறார். அப்போது கூடாரம் அமைக்க பயன்படுத்தப்படும் கம்பைக் கொண்டு சிலம்பாட்டம் ஆடினார். 

வைகோவின் இந்த சிலம்பாட்டம் அங்கிருப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வைகோ சிலம்பம் ஆடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image