டிவிட்டர்ல இனி நீட்டி முழக்கலாம்! 140 எழுத்துக் கட்டுப்பாடு டபுள் மடங்காகுது!

 
Published : Sep 27, 2017, 12:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
டிவிட்டர்ல இனி நீட்டி முழக்கலாம்! 140 எழுத்துக் கட்டுப்பாடு டபுள் மடங்காகுது!

சுருக்கம்

Twitter is changing its character limit for the first time ever doubling the count to characters

சமூக வலைத்தளமான  டிவிட்டரில் கருத்து பதிவிடுபவர்கள் இதுவரை 140 எழுத்துகள் மட்டுமே  பதிவிட முடியும் என்ற கட்டுப்பாடு இருந்து வருகிறது. இது  இனி 280 எழுத்துக்கள் வரை பதிவிடலாம் என்ற  அளவுக்கு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. 

இப்படி, இந்த எழுத்துக் கட்டுப்பாட்டை தளர்த்தி, சோதனை அடிப்படையில் 280 எழுத்துக்கள் வரை பதிவிட வழி செய்துள்ளதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. டிவிட்டரின் தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி தனது டிவிட்டர் பதிவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.  இது  ஒரு சிறிய அளவிலான மாற்றம்தான் என்றாலும், பலரும் இதனை  வரவேற்றுள்ளனர். சிலர் வழக்கம்போல், விமர்சித்துள்ளனர். 

பொதுவாக, கருத்து பதிவிடுபவர்கள், எஸ்எம்எஸ் எனும் குறுஞ்செய்தி அனுப்புபவர்கள், 140 முதல் 160 எழுத்துக்கள் வரை தான் ஒரு செய்தியில் அடித்து அனுப்ப முடியும் என்பது ஒரு பிரச்னையாக இருந்தது.  இதனால் எழுத்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க டிவிட்டர் குழு சோதனை அடிப்படை இதனை 280 எழுத்துகள் வரை என அதிகரித்துள்ளது. இது வெற்றி பெறும் பட்சத்தில் மேலும் எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.  

தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சியினரும் டிவிட்டர் பதிவுகளில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு டிவிட்டர் கணக்குகள் உள்ளன. கருணாநிதி, ராமதாஸ், ஸ்டாலின், பாஜக., தலைவர்கள் என பலருக்கும்  டிவிட்டர் கணக்குகள் உள்ளன. அவற்றில், 1,2,3 என குறிப்பிட்ட எண்ணிக்கையில் வார்த்தைகளை அடக்கி ஒரு முழு நீள அறிக்கையை மடக்கி மடக்கி கவிதை போல் வெளியிடுவோரும் உண்டு. இனி இந்தக் கட்டுப்பாட்டுக்கு விடுதலை கிடைத்தால், அவர்கள் எல்லாம் அறிக்கைகளை நீட்டி முழக்கலாம்தான்! 

டிவிட்டரின் இந்த அறிவிப்பு வந்தவுடன், வழக்கம்போல் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் கேலியும் கிண்டலும் தூள் பறந்தன. அமெரிக்காவில் அதிக கிண்டலுக்கு ஆளாகும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறித்து ஒருவர் இட்ட டிவிட்டர் பதிவு பலருக்கு பெரிதும் ரசிக்கும் படி அமைந்தது. #280characters என்ற ஹாஷ் டாக் போட்டு டிவிட்டரில் தூள் பறத்துகின்றனர் நெட்டிசன்கள்!

 

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தில் தவிக்கும் 4,000 காஷ்மீர் மாணவர்கள்.. உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம்!
விளையாட வரமாட்டியா? நண்பன் மறைந்தது தெரியாமல் குழந்தைகள் எழுதிய கடிதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!