வடகொரியாவை ஓட ஓட விரட்டும் உலக நாடுகள்..! வடகொரியாவுக்கு ஷாக் கொடுத்த சீனா..!

north korean companies ordered to close in china
north korean companies ordered to close in china


சீனாவில் செயல்படும் வடகொரிய நிறுவனங்கள் 120 நாட்களுக்குள் மூடப்பட வேண்டும் என சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகநாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா, தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாத இடைவெளியில் வடகொரியா 6 முறை அணு ஆயுத சோதனை நடத்தியுள்ளது. 

Latest Videos

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே வார்த்தைப் போரே நடந்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்ததோடு பரஸ்பரம் போர் அறிவித்தனர். இதனால் உலக அரங்கில் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை பலமுறை பொருளாதாரத்தடைகளை விதித்துள்ளது. ஆனால் இவை எதையும் பொருட்படுத்தாத வடகொரியா தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனைகளை நடத்தியது.  வடகொரியா மீது மீண்டும் கடுமையான  பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. அனைத்து உறுப்புநாடுகளின் முழு ஆதரவுடன் இந்த தீர்மானம் ஐநாவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

ஐநா விதித்த பொருளாதாரத் தடையை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் சீனாவில் இயங்கிவரும் வடகொரியா நிறுவனங்கள் 120 நாட்களுக்குள் மூட வேண்டும் என சீன வர்த்தகத்துறை உத்தரவிட்டுள்ளது.

உலக அரங்கில் வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடாக அறியப்பட்ட சீனாவும் வேறுவழியின்றி வடகொரியாவை விரட்டுகிறது.
 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image