ஒரே நாளில் அமெரிக்காவில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா... பாதிப்பு பட்டியலில் சீனாவை முந்தியது அமெரிக்கா!

By Asianet TamilFirst Published Mar 27, 2020, 9:03 AM IST
Highlights

இன்று காலை 8 மணி நிலவரப்படி உலகெங்கும் கொரோனா வைரஸுக்கு 5.32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளார்கள். 1.24 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள். கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவே முதலிடத்தில் இருந்துவந்தது. 

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவை அலறவிட்டுள்ளது. அந்த நாட்டில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்குக் கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி உலகெங்கும் கொரோனா வைரஸுக்கு 5.32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளார்கள். 1.24 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள். கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனாவே முதலிடத்தில் இருந்துவந்தது. அதிக மரணங்களைச் சந்தித்த இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள்கூட சீனாவுக்கு அடுத்த நிலையில்தான் இருந்தன. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்துக்கு வந்துவிட்டது. அந்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் அதிகரித்தவண்ணம் உள்ளனர்.
குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரம் அதிகரித்தது. தற்போதைய நிலையில் அமெரிக்காவில் 85,594 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,300 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்துக்கு சென்ற நிலையில் இரண்டாம் இடத்துக்கு சீனா இறங்கியுள்ளது. அந்நாட்டில் 81,340 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,292 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில் இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன.


கொரோனா வைரஸின் தாக்கம் அமெரிக்காவில் அதிகரித்துவருவதால், அந்நாடு அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. அமெரிக்காவில் ஏப்ரல் 7 வரை ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையால் அமெரிக்காவில் பீதி நிலவுகிறது. “கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமெரிக்க அரசு மிகத் தாமதமாக முன்னெடுத்ததே இந்தப் பாதிப்புக்குக் காரணம்” என்று அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டிவருகிறார்கள்.

click me!