இத்தாலி-712, ஸ்பெயின்-498 பிரான்ஸ்-365 ..! ஒரே நாளில் உலுக்கி எடுத்த கொடூர கொரோனா பலி..!

By Manikandan S R S  |  First Published Mar 27, 2020, 8:28 AM IST

உலகம் முழுவதும் 5,31,630 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 24,065 ஆக இருக்கிறது. 
 


உலக நாடுகளை புரட்டி போட்டிருக்கும் கொரோனா வைரஸ் சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய நிலையில் அங்கு 3,287 பேரை காவு வாங்கியது. டிசம்பர் முதல் கொரோனா தாக்குதலால் கடும் பாதிப்படைந்திருக்கும் சீனாவில் தற்போது இயல்பு நிலை மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது.  ஆனால் மற்ற நாடுகளில் கொரோனா தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. இத்தாலி, ஸ்பெயின்,ஈரான், அமெரிக்கா,பிரான்ஸ், இந்தியா என உலகின் 198 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது.

Latest Videos

சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 712 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மொத்தமாக அந்நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயினில் 4 ஆயிரத்து 145 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் அங்கு 498 பேர் பலியாகியுள்ளனர்.

பிரான்சிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தாக்குதலுக்கு 365 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,696 ஆக அதிகரித்துள்ளது.ஈரானில் 2,234 பேரும், அமெரிக்காவில் 1,293 பேரும் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 5,31,630 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 24,065 ஆக இருக்கிறது.

இந்தியாவில் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 727 ஆக உயர்ந்து 17 பேர் பலியாகி இருக்கின்றனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த உலகமும் நிலைகுலைந்து போயுள்ளது.

click me!