இலவசமாக கிடைத்த சோபாவில் ரூ. 27 லட்சம்.... அதிர்ஷ்டசாலி பெண் என்ன செய்தார் தெரியுமா..?

By Kevin Kaarki  |  First Published Jun 5, 2022, 2:29 PM IST

விக்கி ஒமுடு என்ற பெண் சமீபத்தில் புது வீடு ஒன்றை வாங்கினார். தான் வாங்கிய புது வீட்டில் வைப்பதற்காக சோபா ஒன்றை வாங்க முடிவு செய்தார்.


கலிபோர்னியாவில் வசிக்கும் பெண்ணிற்கு வழங்கப்பட்ட இலவச சோபாவில் ரூ. 27 லட்சத்து 94 ஆயிரம் கிடைத்ததை அடுத்து அதிர்ந்து போனார். இதன் பின் அவர் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

விக்கி ஒமுடு என்ற பெண் சமீபத்தில் புது வீடு ஒன்றை வாங்கினார். தான் வாங்கிய புது வீட்டில் வைப்பதற்காக சோபா ஒன்றை வாங்க முடிவு செய்தார். அதன் படி குறைந்த விலையில் சோபா வாங்க முயற்சி செய்த விக்கி ஒமுடுவிற்கு இலவசமாகவே கிடைத்தது. 

Tap to resize

Latest Videos

பெரிய தொகை:

ஆசை ஆசையாக வீட்டிற்கு கொண்ட வந்த சோபாவில் கட்டுக் கட்டாக பணம் கிடப்பதை பார்த்தார். அதன்படி சோபாவில் இருந்து 36 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 27 லட்சத்து 94 ஆயிரத்து 122) எடுத்தார். உடனே சோபாவை வழங்கியவரை தொடர்பு கொண்ட விக்கி ஒமுடு, சோபாவில் இருந்த தொகையை அப்படியே வழங்கினார். விக்கி ஒமுடுவின் செயலை பார்த்து நெகிழ்ந்து போன குடும்பத்தார், விக்கி ஒமுடுவுக்கு 2 ஆயிரம் டாலர்களை வழங்கினர். 

எவ்வித சன்மானத்தையும் எதிர்பாரக்காத விக்கி ஒமுடு, தனக்கு கிடைத்த 2 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 55 ஆயிரத்து 229) கொண்டு தனது புதிய வீட்டில் வைப்பதற்காக குளிர்சாதன பெட்டியை வாங்கி உள்ளார். 

நெகிழ்ச்சி சம்பவம்:

“லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் உள்ள கால்டன் பகுதியில் புதிய வீட்டை வாங்கினேன். வீட்டில் தற்போது தான் குடியேறினேன். இதன் காரணமாக என் வீட்டில் எந்த பொருளும் வாங்கவில்லை. எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இதனால் சோபா ஒன்றை வாங்கி, வீட்டிற்கு கொண்டு வந்தேன்,” என விக்கி ஒமுடு தெரிவித்து இருக்கிறார்.

சோபாவை தூசி தட்டும் போது, அதனுள் பல கட்டுக்களாக டாலர்களை எடுத்தேன். அதில் பல ஆயிரம் டாலர்கள் இருந்தது. “நான் என் மகனிடம் கூறினேன், வா, வா, வா, நான் ஆர்வத்தில் கத்தினேன், இது பணம்! நான் அந்த நபரை தொடர்பு கொள்ள வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.  

வீட்டில் வசித்து வந்த ஒருவர் இறந்து விட்டதை அடுத்து, அவர் பயன்படுத்திய சோபாவை விக்கி ஒமுடுவிக்கு வழங்க குடும்பத்தார் முடிவு செய்தனர். 

click me!