புதிய விண்வெளி நிலையம்... மூன்று வீரர்களை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பிய சீனா...!

By Kevin Kaarki  |  First Published Jun 5, 2022, 11:32 AM IST

விண்வெளிக்குச் சென்ற மூன்று வீரர்களும் விண்வெளியில் இருந்தபடி பூமியில் இருக்கும் சீன வல்லுனர்களுடன் இணைந்து பணியாற்றி வந்தனர். 


சீனா உருவாக்கி வரும் புது விண்வெளி மைய பணிகளை மேற்கொள்வதற்காக மூன்று விண்வெளி வீரர்களை இன்று சீனா விண்வெளிக்கு அனுப்பி இருக்கிறது.  

விண்வெளியில் டியாங்காங் என்ற தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது. இதற்காக விண்வெளி வீரர்களை பலக் கட்டங்களாக தொடர்ந்து விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. இவ்வாறு சீனா தனது புதிய விண்வெளி நிலையத்துக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

Latest Videos

undefined

சீனா விண்வெளி நிலையம்:

இதற்காக பல முறை விண்வெளி வீரர்களை சீனா விண்வெளிக்கு அனுப்பி உள்ளது. அதன் படி கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் சீனாவின் ஷென்சோ 13 விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு சென்றனர். விண்வெளிக்குச் சென்ற மூன்று வீரர்களும் விண்வெளியில் இருந்தபடி பூமியில் இருக்கும் சீன வல்லுனர்களுடன் இணைந்து பணியாற்றி வந்தனர். 

விண்வெளியில் ஆறு மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் ஷென்சோ 13 குழுவினர் மங்கோலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள கோபி பாலைவனத்தில் தரையிறங்கி சமீபத்தில் தான் பூமிக்கு வந்தனர். இந்த நிலையில் விண்வெளி நிலையத்துக்கான அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக, சீனா தனது புதிய விண்வெளி நிலையத்திற்கு ஷென் டாங் 43 மற்றும் அவரது குழுவினர் லியு யாங் 43 மற்றும் கை சுஹி 46 விண்வெளி வீரர்களை ஜூன் மாதத்தில் அனுப்ப ஏற்கெனவே திட்டமிட்டு இருந்தது. 

லாங் மார்ச் 2F:

அதன்படி, சீனாவின் வடமேற்கு மாகாணம் கன்சுவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுகணை தளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 10:44 மணிக்கு மூன்று சீன விண்வெளி வீரர்களுடன் லாங் மார்ச்-2F ராக்கெட்டை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இவர்கள் மூவரும் ஷென்சோ 14 விண்கலத்தில் சென்றனர். 

தற்போது விண்வெளுக்கு செல்லும் மூன்று பேர் அடங்கிய குழு ஆறு மாதங்கள் விண்ணில் தங்கியிருந்து விண்வெளி நிலையத்தின் வெண்டியன் மற்றும் மெங்டியன் என்ற இரண்டு தொகுதிகளை சேர்க்கும் பணியில் ஈடுபட உள்ளனர். 

click me!