ஆட்குறைப்பு நடவடிக்கையில் எலான் மஸ்க்... வேலை இழந்த 10,000 டெஸ்லா ஊழியர்கள்!!

By Narendran S  |  First Published Jun 4, 2022, 2:43 PM IST

டெஸ்லா நிறுவத்தில் புதிய ஆட்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறும் தற்போது 10% ஆட்குறைப்பு செய்யவும் நிர்வாகிகளுக்கு நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார். 


டெஸ்லா நிறுவத்தில் புதிய ஆட்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறும் தற்போது 10% ஆட்குறைப்பு செய்யவும் நிர்வாகிகளுக்கு நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், டிவிட்டரை வாங்க ஒப்பந்தம் செய்திருந்தார். அதன்படி, டிவிட்டர் நிறுவனத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். இதன் மூலம் அதிகமாக பங்குகளை வைத்திருக்கும் தனிநபர் என்ற பெருமையைப் பெற்றார். ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் அழைப்பு விடுக்கப்பட்டபோது, அதில் இணைவதற்கு எலான் மஸ்க் மறுத்துவிட்டார். அடுத்த சில நாட்களில் ட்விட்டர் சமூக வலைதளத்தை 4400 கோடி டாலருக்கு நானே வாங்கிக்கொள்கிறேன் என்று எலான் மஸ்க் அறிவித்தார். ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்க விரும்புவதாகவும் எலான் மஸ்க் பங்குச்சந்தையில் பைலிங்கில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்கிற்கும் ஒப்பந்தம் கையொப்பமானது. ஆனால், திடீரென ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் தனது முடிவை ஒத்திவைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

டிவிட்டர் நிறுவனத்தில் ஏராளமான போலிக் கணக்குகள் இருப்பதால், அதுதொடர்பாக தகவல்கள் தேவை என்று எலான் மஸ்க் கோரியிருந்தார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கூறியபோது 12 சதவீதம் அதிகரித்த பங்குகள், தனது முடிவை ஒத்திவைப்பதாக அறிவித்தபின் 27 சதவீதம் திடீரென சரிந்தன. இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும், ட்விட்டர் நிறுவனத்தைப் பற்றி தவறான தகவல் பரப்பியது, ட்விட்டர் நிர்வாகத்தில் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் கலிபோர்னியா வடக்கு மாவட்ட நீதிமன்றத்தில் எலான் மஸ்க் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதற்கிடையே ஹெச்எஸ்ஆர் சட்டத்தின் கீழ் ட்விட்டர் நிறுவனத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாங்கிக்கொள்வதாக செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் காலக்கெடுவும் முடிந்துவிட்டது. இதனால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் எலான் மஸ்கின் ஒப்பந்தம் முறைப்படி முடிவுக்கு வந்துவிட்டதாக டிவிட்டர் நிறுவனம் அறிவித்தது. இதனிடையே தன்னுடைய நிறுவனத்தில் பகுதி அளவு பணியிடங்களை நீக்குமாறு புதிய ஆட்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறும் நிர்வாகிகளுக்கு டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து டெஸ்லா நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், இப்பொது இருக்கும் பணியாளர்களில் 10% ஆட்களை குறைக்க வேண்டும்.

மேலும் உலகில் உள்ள தம்முடைய தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் புதியதாக யாரையும் பணியமர்த்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தில் வர்க் பிரம் ஹோம்-ஐ சமீபத்தில் தடை செய்த அவர், தற்போது 10% ஆட்குறைப்பு செய்ய வலியுறுத்தி நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். தன்னுடைய உத்தரவிற்கு பிறகும் அலுவலகங்களுக்கு திரும்பாமல் வீட்டில் இருந்தபடியே பணிகளை தொடரும் ஊழியர்கள் வேறு இடங்களில் வேலை தெடிக் கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார். இதனால் டெஸ்லாவில் உலகம் முழுவதுமாக சுமார் 1 லட்சம் பேர் பணியாற்றி வரும் நிலையில், அதில் 10,000 பேர் தற்போது வேலை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது. முன்னதாக, வீட்டில் இருந்து பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும், வாரத்திற்கு குறைந்த பட்சம் 40 மணி நேரம் வேலைபார்க்க வேண்டும் எனவும், தவறியவர்கள் வேலையை விட்டுச் செல்லலாம் என எலான் மஸ்க் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!