30 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த சேமிப்புக் கிடங்கில் ஹைட்ரஜன் பெராக்சைடு உள்பட இரசாயணங்கள் இருந்தது. இதில் 600 பேர் பணியாற்றி வந்தனர்.
வங்கதேசத்தின் சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர். மேலும் 450 பேர் தீ விபத்தில் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
சிட்டகாங் மாவட்டத்தின் வெளியே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உள்நாட்டு சேமிப்புக் கிடங்கு ஆகும். இந்த சேமிப்புக் கிடங்கு மே 2011 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த சேமிப்புக் கிடங்கில் ஹைட்ரஜன் பெராக்சைடு உள்பட இரசாயணங்கள் இருந்தது. இதில் 600 பேர் பணியாற்றி வந்தனர்.
இராசயண அதிர்வினை காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை அடுத்து ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீ பரவியது. தீ விபத்து நேற்று இரவு 9 மணிக்கு ஏற்பட்டது. இதை அடுத்து நள்ளிரவு வேளையில் வெடி விபத்து ஏற்பட்டு, தீ மளமளவென பர துவங்கியது.
அதிகரிக்கும் உயிரிழப்புகள்:
“சுமார் 450-க்கும் அதிகமானோர் இந்த விபத்தில் காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது,” என்று ரெட் கிரெசண்ட் யூத் சுகாதாரம் மற்றும் சேவை துறை தலைவர் இஸ்தாகுல் இஸ்லாம் தெரிவித்து இருக்கிறார். இந்த விபத்து காரணமாக அருகாமையில் உள்ள கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து போயின.
“தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் 19 தீயணைப்பு யூனிட்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் ஆறு ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன,” என்று சிட்டகாங் தீயணைப்பு மற்றும் பொது பாதுகாப்பு துறை இணை இயக்குனர் எம்.டி. ஃபரூக் ஹொசைன் சிக்தர் தெரிவித்தார்.