சீனாவுக்கு ஆடியோடு ஆப்பு வைத்த அமெரிக்கா..!! டிக்டாக் செயலியை தடை செய்ய ட்ரம்ப் தீவிரம்..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 3, 2020, 4:46 PM IST
Highlights

அமெரிக்காவிலிருந்து தகவல்களை சீனா தனது தொழில் நுட்பத்தின் மூலம் தங்களது நாட்டுக்கு கடத்துவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. 

அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப், விரைவில் சீனாவின் வீடியோ பகிர்வு பயன்பாடான டிக் டாக் செயலி போன்றவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுப்பார் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். டிக் டாக் மற்றும் அமெரிக்காவில் இயங்கும் வெப் சாட் போன்ற சீன மென்பொருள் நிறுவனங்கள், அமெரிக்க மக்களின் தரவுகளை நேரடியாக திருட பயன்படுகிறது என அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தில் நீடித்து வரும் பனிப்போர், கொரோனா வைரஸ் தொற்று, ஹாங்காங் விவகாரம், உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல், தென் சீன கடல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஹூஸ்டன் மற்றும் டெக்சாஸ் உள்ளிட்ட இடங்களில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்கா சமீபத்தில் அதிரடியாக உத்தரவிட்டது. இதனைக் கண்டித்த சீனா அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி  கொடுக்கும் வகையில் சீனாவின்  செங்டுவில் இயங்கி வந்த அமெரிக்க தூதரகத்தை மூட உத்தரவிட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவு கேள்விக்குறியாகிஉள்ளது.

இந்நிலையில் சீனாவை வர்த்தக ரீதியாக முடக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது,  அது மட்டுமில்லாமல் சீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அமெரிக்கா முன்வைத்து வரும் நிலையில், அமெரிக்காவிலிருந்து தகவல்களை சீனா தனது தொழில் நுட்பத்தின் மூலம் தங்களது நாட்டுக்கு கடத்துவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதனால் சீனாவின் டிக் டாக் உள்ளிட்ட செயலிகளை தடை செய்வது குறித்து ஆலோசித்து  வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, டிக் டாக் மற்றும் அமெரிக்காவில் இயங்கும் வெப் ஷாட் போன்ற  சீன மென்பொருள் நிறுவனங்கள், அமெரிக்க குடிமக்களின் தனிப்பட்ட தரவுகளை நேரடியாக சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளிக்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார். சீனாவில் இந்த நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா பல ஆண்டுகளாக கண்டுகொள்ளவில்லை, ஆனால் தற்போது அதிபர் ட்ரம்ப் அதை சரி செய்ய போகிறார்.  

சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய மென் பொருள்களால் ஏற்படும் பாதுகாப்பு, அபாயங்கள் குறித்து ட்ரம்ப் விரைவில் நடவடிக்கை எடுப்பார் . என பாம்பியோ கூறியுள்ளார். அதே போல் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீனாவின் டிக் டாக் செயலியை தடை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதை மேற்கோள் காட்டியுள்ள அமெரிக்க நிதியமைச்சர்  ஸ்டீவன் முனுச்சின்  நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் சீன பயன்படான டிக் டாக் மூலம் சுமார் 100 மில்லியன் அமெரிக்கர்களின் தகவல்கள் கடத்தப்படும் ஆபாயத்தில் உள்ளது என கூறியுள்ளார். இந்நிலையில் அந்த செயலியை வாங்குவது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக் டாக் நிறுவனத்தின் தாய் அமைப்பான பைட் டான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!