பாகிஸ்தான் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும்..!! ரத்த வெறிபிடித்த இம்ரான்கானை எச்சரித்த இஸ்லாமிய நாடு.

By Ezhilarasan BabuFirst Published Aug 3, 2020, 11:06 AM IST
Highlights

 குறிப்பாக ஆப்கனிஸ்தான் உடன் நட்பாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த மார்ச் மாதம் வாஷிங்டன் போஸ்ட்க்கு அவர் அளித்த பேட்டியில்,  ஆப்கானிஸ்தானில் நடக்கும் அதனை பயங்கரவாத நிகழ்வுகளுக்கும் பாகிஸ்தானே காரணம் என குற்றம் சாட்டியிருந்தார்.

பாகிஸ்தான் அண்டை நாடுகளுடன் நட்பாகவும், நாகரிகமாகவும் நடந்துகொள்ளவேண்டும் என ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி கர்ஸாய் எச்சரித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஆப்கனிஸ்தான் குடியிருப்பு பகுதிகளுக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய பீரங்கி தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கர்சாய் இவ்வாறு எச்சரித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவ படைகள் பீரங்கி தாக்குதல் மற்றும் ஷெல் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஆனால் இந்த தாக்குதல்களை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில் கந்தகார் மாகாணத்தில் உள்ள  ஸ்பின் போல் டாக் மாவட்டத்தில் வியாழக்கிழமை அன்று குடியிருப்பு பகுதிகளின் மீது பாகிஸ்தான் பீரங்கி தாக்குதல் நடத்தியதாக, ஆப்கனிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. அதில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தானிலிருந்துதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் பதில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீது கர்ஸாய் பாகிஸ்தான் அண்டை நாடுகளுடன் நட்பாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களில் பெரும்பாலானவை பாகிஸ்தானின் தூண்டுதலின் பெயரில் நடப்பதாக கர்ஸாய் குற்றம்சாட்டியுள்ளார்.  கர்ஸாயின் இந்த கருத்தை ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆதரித்துள்ளார்.

மேலும் இது குறித்து தெரிவித்துள்ள கர்ஸாய், பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு தனது  வருத்தத்தை தெரிவித்துள்ளார். ஈத்திற்கு சற்று முன்னதாக நடந்த இந்த சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மோசமாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் தனது அண்டை நாடுகளுடன் நட்பாகவும், நாகரிகமாகவும் நடந்துகொள்ளவேண்டும். குறிப்பாக ஆப்கனிஸ்தான் உடன் நட்பாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த மார்ச் மாதம் வாஷிங்டன் போஸ்ட்க்கு அவர் அளித்த பேட்டியில், ஆப்கானிஸ்தானில் நடக்கும் அதனை பயங்கரவாத நிகழ்வுகளுக்கும் பாகிஸ்தானே காரணம் என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள ஆப்கனிஸ்தான் அரசாங்கம், பாகிஸ்தான் ராணுவம் தனது அப்பாவி மக்கள் மீது தேவையற்ற முறையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது. சனிக்கிழமை இரவு வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது, ஆனாலும் நிலவரத்தை கட்டுப்படுத்த இரு நாடுகளும் முயற்சித்து வருகின்றன என தெரிவித்துள்ளது. இந்நிலையில் இம்ரான்கான் அரசின் அமைச்சர் ஷிப்லி ஃபராஜ்  கூறுகையில்,  பதற்றம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, மறுபக்கத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தினால், பாகிஸ்தான் ராணுவத்திற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது தெரியும் எனக் கூறியுள்ளார்.

ஆனால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா  மௌனமாக இருந்து வருகிறது, ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்காக அமெரிக்க ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய சம்பவத்திற்கு பிறகும் அமெரிக்கா அரசாங்கம் இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் இந்த சம்பவத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக அதன் வெளியுறவுத்துறை அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார். தாலிபன்களுக்கு உதவ வேண்டாம் என அமெரிக்கா பலமுறை பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என்ற அவர், ஆப்கனிஸ்தான் தாலிபன் மற்றும் குறிப்பாக ஹக்கானி வலையமைப்பை பாகிஸ்தான் இராணுவம் ஆதரிக்கிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. 
 

click me!