கொரோனா பீதியெல்லாம் தேவை இல்லை... தேர்தலில் பயமின்றி வாக்களிக்கலாம்... பூஸ்ட் கொடுக்கும் தேர்தல் ஆணையம்!!

By Asianet Tamil  |  First Published Aug 3, 2020, 8:35 AM IST

இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள கொரோனா பீதி காரணமாக வாக்களர்கள் வாக்களிக்க தயக்கம் காட்டலாம் என்று கூறப்படுகிறது.


இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு வருகிற 5-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நடக்க இருந்த இந்தத் தேர்தல் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு தற்போது நடக்க உள்ளது. இலங்கையில் கொரோனாவால் 2823 பேர் பாதிக்கப்பட்டனர். 11 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 298 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். ஆனாலும், கொரோனா  பீதி காரணமாக மக்கள் வாக்களிக்க தயக்கம் காட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos


இந்நிலையில் கொரோனா அச்சமின்றி தேர்தலில் வாக்களிக்கலாம் என்று இலங்கைத் தேர்தல் ஆணைய தலைவர் மகிந்த தேசப்பிரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தேர்தலில் மக்களுக்கு கொரோனா அச்சம் தேவையில்லை. அச்சமின்றி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கலாம். அதேவேளையில் வாக்குச்சாவடிக்கு வரும்போது ஆணையம் அறிவித்துள்ள சுகாதார கட்டுப்பாடுகளை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார். 
 

click me!