இந்தியாவிடம் வாலாட்டாக்கூடாது... சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published May 21, 2020, 3:47 PM IST
Highlights

இந்தியாவுடனான எல்லையாக இருந்தாலும், ஆத்திரமூட்டும் மற்றும் தொந்தரவு செய்யும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இந்தியாவுடனான எல்லையாக இருந்தாலும், ஆத்திரமூட்டும் மற்றும் தொந்தரவு செய்யும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

சிக்கிம் எல்லை வழியே தங்கள் பகுதிக்குள் ஊடுருவி தங்களது வீரர்களின் ரோந்து பணியை இந்திய ராணுவத்தினர் தடுத்து விட்டதாக சீனா குற்றம்சாட்டியது. சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மேற்கு எல்லை வழியாகவும், சிக்கிம் வழியாகவும் தங்கள் பகுதிக்குள் வந்துள்ள வீரர்களை இந்தியா உடனடியாக திரும்பப் பெற வேண்டும், முந்தைய நிலையை அங்கு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுவரை பதிலளிக்கவில்லை. சிக்கிமின் நாகு லா பகுதியில் கடந்த ஏப்ரல் மாத மத்தியில் இருந்து இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதேபோல் கிழக்கு லடாக் உள்ளிட்ட பகுதிகளிலும் தகராறு நிலவுகிறது. இதனால் அங்கு இருநாடுகளும் அங்கு வீரர்களை குவித்துள்ள நிலையில், சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. 

இந்தியாவுடனான எல்லைத் தகராறில் சீனாவின் தொந்தரவு தரும் நடத்தைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.எல்லை தொடர்பாக இந்தியாவுடன் சீனா மேற்கொள்ளும் தகராறுகள், அந்நாட்டின் ஆக்கிரமிப்பு குணம் வெறும் வார்த்தைகளோடு நின்று விடுவதில்லை என்பதையே காட்டுவதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஆலிஸ் வெல்ஸ் கூறியுள்ளார்.

தென் சீனக் கடல் பகுதியாக இருந்தாலும், இந்தியாவுடனான எல்லையாக இருந்தாலும், ஆத்திரமூட்டும் மற்றும் தொந்தரவு செய்யும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். சீனாவின் இத்தகைய போக்கு, அதிகரித்து வரும் வல்லமையை அந்த நாடு எப்படி பயன்படுத்த முயற்சி செய்யும் என்பது குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்புவதாகவும் ஆலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார். 

click me!