அமெரிக்காவில் அண்மைக்காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வார இறுதி நாட்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் டெக்சாஸில் உள்ள பள்ளி, கலிபோர்னியாவில் உள்ள ஒரு தேவாலயம், நியூயார்க்கில் உள்ள சூப்பர் மார்க்கெட் மற்றும் ஓக்லஹோமாவில் உள்ள மருத்துவமனை உட்பட அண்மையில் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறியது.
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்தில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அண்மைக்காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வார இறுதி நாட்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் டெக்சாஸில் உள்ள பள்ளி, கலிபோர்னியாவில் உள்ள ஒரு தேவாலயம், நியூயார்க்கில் உள்ள சூப்பர் மார்க்கெட் மற்றும் ஓக்லஹோமாவில் உள்ள மருத்துவமனை உட்பட அண்மையில் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறியது.
இந்நிலையில், அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் மக்கள் அதிக அளவில் கூடியிருந்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய சில மர்ம நபர்கள் திடீரென வந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத மக்கள் அலறியடித்து கொண்டு அனைத்து திசைகளிலும் ஓடினர். துப்பாக்கி சூடு நடக்கும் சத்தம் கேட்டு ரோந்து பணியில் இருந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதனையடுத்து, துப்பாக்கி ஏந்திய நபர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில், மர்ம நபர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. எனினும், மர்ம நபர்களின் தாக்குதலில் 2 ஆண்கள், ஒரு பெண் உடப்ட 3 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.