இது அவர்களுடைய இயல்பு என்றேநான் கூறுவேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி செய்த போது அல்கொய்தாவின் சரணாலயமாக ஆப்கன் திகழ்ந்தது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ளதால் மீண்டும் அங்கு அல்கொய்தா தலைதூக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது ஆப்கானிஸ்தான் அல்கொய்தாவின் சொர்க்கபுரியாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து ஒட்டுமொத்த நாட்டையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஒட்டுமொத்த அமெரிக்க படைகள் வெளியேற அவகாசம் வழங்கப்பட்டு இருந்த நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய அரசை உருவாக்குவதற்கான முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தலிபான்கள் இடைக்கால அரசு அறிவித்துள்ளது
நிலையில், முல்லா முகமது அசன் அகண்ட் இடைக்கால அரசின் தலைவராகவும், தலிபான் தலைவர் முல்லா பரதர் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருப்பார் என்றும், வெளியுறவுத்துறை துணை அமைச்சராக ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டாலிக்சாயும் , உள்துறை அமைச்சராக சிராஜூதீன் ஹக்கானி பாதுகாப்பு அமைச்சராகவும், முல்லா யாகூப் இடைக்கால அரசின் பாதுகாப்புத்துறை மந்திராயகவும் இருப்பார்கள் என்றும் தலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் சீனா,பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தலிபான்களின் இடைகால நிர்வாகத்தை ஆதரித்துள்ளதுடன் , சீனா 31 மில்லியன் டாலர் அளவுக்கு உதவிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஆப்கனிஸ்தான் நிலையை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் லைட் ஆஸ்டின், 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை தாக்க ஆப்கனிஸ்தானை ஒரு தளமாக அல்கொய்தா பயன்படுத்தியது. தற்போது ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி உள்ளதால் மீண்டும் ஆப்கனிஸ்தானில் அல்கொய்தா நுழைய வாய்ப்பு இருக்கிறது.
ஆப்கனிஸ்தானில் நிலவும் சூழல் என்ன, அங்கு தலிபான்களின் தலைமையில் ஆல்கொய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் தலைதூக்கும் திறன் எந்தளவுக்கு உள்ளது என்பதை ஒட்டுமொத்த சமூகமும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் அல்கொய்தாவின் இயல்பு என்னவென்றால், அது எந்த இடத்திலும் ஊடுருவி தன்னை மீளுருவாக்கம் செய்துகொள்ளும் திறன் கொண்டது. அது ஆப்கனிஸ்தான் ஆக இருந்தாலும் சரி, சோமாலியா வாக இருந்தாலும் சரி எந்த பாதுகாப்பற்ற இடத்திலும் அவர்கள் எளிதில் நுழைவார்கள்.
இது அவர்களுடைய இயல்பு என்றேநான் கூறுவேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி செய்த போது அல்கொய்தாவின் சரணாலயமாக ஆப்கன் திகழ்ந்தது. 2001 செப்டம்பர் 11 அமெரிக்காவில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு அல்கைதா தலைவர்களை அமெரிக்காவிடம் ஒப்படைக்க தலிபான்கள் மறுத்துவிட்டனர். அதனால் தான் தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது 20 வருட அமெரிக்க யுத்தத்தின் போது அங்கு அல்கைதா பெருமளவில் குறைந்துவிட்டனர், ஆனால் தற்போது காபுலில் தலிபான்களின் ஆட்சி உருவாகியுள்ளதால் மீண்டும் அங்கு அல்கைதா உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது இது அந்நாட்டிற்கு நல்லதல்ல என அவர் எச்சரித்துள்ளார்.