அந்தப் புகைப்படத்திற்கு கீழே கருத்து தெரிவித்திருக்கும் பல நெட்டிசன்கள் அந்த பெண்ணின் துணிச்சலுக்காக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தலிபான்கள் பல போர்களை எதிர்கொண்டு ஆட்சி அதிகாரத்தை ஆப்கானிஸ்தானில் நிறுவியுள்ளனர். தங்கள் ஆட்சிக்கு எதிராக பெருகிவரும் போராட்டங்களை இப்போது எதிர் கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் முழுவதும் தலிபான்கள் ஆட்சி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களை மிரட்டி வந்ததாக கூறப்பட்ட நிலையில், அந்நாட்டை சார்ந்த பல குடிமகன்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், காபூலில் நடந்த ஒரு போராட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம், வெளிப்படையான அத்துமீறலை எதிர்த்து உணர்வை சித்தரிப்பதாக இருக்கிறது. இந்த புகைப்படம் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பலர் இதை 'வரலாற்று' புகைப்படம் என்று இனி கருதுவார்கள். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் கிளிக் செய்யப்பட்ட புகைப்படத்தை, டோலோ நியூஸின் நிருபர், ஆப்கான் பத்திரிகையாளர் ஜஹ்ரா ரஹிமி பகிர்ந்துள்ளார். அடையாளம் தெரியாத அந்த ஆப்கானிஸ்தான் பெண் "பயமின்றி" தலிபான் ஆயுதமேந்திய போராளிக்கு எதிராக நேருக்கு நேர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறார். ஆனால் அந்தப்பெண் பயப்படவில்லை. நேருக்கு நேர் நெஞ்சமுயர்த்தி காட்டுகிறார்.
அந்தப் புகைப்படத்திற்கு கீழே கருத்து தெரிவித்திருக்கும் பல நெட்டிசன்கள் அந்த பெண்ணின் துணிச்சலுக்காக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அந்த பெண் யார் என்று அடையாளம் கண்டு தலிபான்களிடமிருந்து பழிவாங்கலுக்கு வழிவகுக்கும் என்ற கவலையை வெளிப்படுத்தினர்.
ஆப்கானிஸ்தானில் போரினால் பாதிக்கப்பட்ட தலிபான் தனது புதிய ஆட்சியின் அரசியலமைப்பை நேற்று அறிவித்தது. புதிய ஆப்கானிஸ்தான் அரசில் "பெண்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்" என்று முன்பு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் பெண்களுக்கு அளிக்கப்படவில்லை.