அடேய் பாகிஸ்தான்காரா.. தலிபான்களை சீனாக்காரன்கிட்ட சிக்க வச்சுட்டியே நியாயமா.? 31 மில்லியன் கொடுத்த ஜின் பிங்

By Ezhilarasan Babu  |  First Published Sep 9, 2021, 1:41 PM IST

இந்நிலையில் தலிபான்களின் இடைக்கால அரசுக்கு சீனா, பாகிஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இடைக்கால அரசை அறிவித்துள்ள நிலையில்  சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அத்துடன் புதிதாக அமைந்துள்ள தலிபான் அரசுக்கு 31 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உதவிகள் வழங்கப்படும் என்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யீ அறிவித்துள்ளார். 

20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து ஒட்டுமொத்த நாட்டையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஒட்டுமொத்த அமெரிக்க படைகள் வெளியேற அவகாசம் வழங்கப்பட்டு இருந்த நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய அரசை உருவாக்குவதற்கான முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தலிபான்கள் இடைக்கால அரசு அறிவித்துள்ளது நிலையில், முல்லா முகமது அசன் அகண்ட் இடைக்கால அரசின் தலைவராகவும், தலிபான் தலைவர் முல்லா பரதர் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருப்பார் என்றும், வெளியுறவுத்துறை துணை அமைச்சராக ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டாலிக்சாயும் , உள்துறை அமைச்சராக சிராஜூதீன் ஹக்கானி பாதுகாப்பு அமைச்சராகவும், முல்லா யாகூப் இடைக்கால அரசின் பாதுகாப்புத்துறை மந்திராயகவும் இருப்பார்கள் என்றும் தலிபான்கள் அறிவித்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் தலிபான்களின் இடைக்கால அரசுக்கு சீனா, பாகிஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தலிபான்கள் இடைகால அரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக  பாகிஸ்தான் அண்டை நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை ஏற்று சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யி அதில் கலந்து கொண்டார். ஆனால் ரஷ்யா அந்த கூட்டத்தை புறக்கணித்தது. அதில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது குரோஷி, ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ தலிபான்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவதாகவும், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைத்துள்ள இடைக்கால அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங்-யி, தலிபான் அரசுக்கு சீனா தனது முழு கருவூலத்தையும் திறக்கிறது என்றும், ஆப்கனுக்கு சுமார் 31 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் அங்குள்ள குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவந்து ஒழுங்கை நிலைநாட்ட இந்த உதவி அவசியம் என்றும் சீன வெளியுறவு துறை அமைச்சர் கூறினார். முதற்கட்டமாக சீனாவிலிருந்து ஆப்கனுக்கு உணவு தானியங்கள், குளிர்கால பொருட்கள், கொரோனா தடுப்பூசிகள் மற்றும் தேவையான மருந்துகள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். சமீபத்தில் தலிபான்கள் சீனா தங்களின் முக்கியமான கூட்டாளி என்று வர்ணித்திருந்த நிலையில் சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் தலிபான்கள் தங்களது ஆட்சி நிர்வாகத்தை கட்டியெழுப்ப சீனாவையே சார்ந்திருப்பதாகவும், அதன் வெளிப்பாடாகவே சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் சர்வதேச அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 
 

click me!