அமெரிக்காவில், கொரோனா தொற்று மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது. ஒரு நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில், கொரோனா தொற்று மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது. ஒரு நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சீனாவில் பிறப்பிடமான கொரோனா வைரஸ் தற்போது உலகம் நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இதுவரை 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. அத்துடன் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தையும் எட்டியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 97 லட்சத்தை நெருங்கி வருகிறது. தேர்தல் நாளன்று அங்கு 93 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 1190க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை238,641 கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 6,236,170ஐ கடந்துள்ளது. தற்போது 3,217,717 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.