காபூல் விமானத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு.. 60 பேர் உடல்சிதறி பலி.. தேடி வந்து வேட்டையாடுவோம்.. ஜோ பைடன்

By vinoth kumar  |  First Published Aug 27, 2021, 8:48 AM IST

காபூல் குண்டுவெடிப்பை மறக்கமாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்; அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்தே ஆக வேண்டும், தேடிவந்து வேட்டையாடுவோம் என ஆவேசமாக கூறியுள்ளார்.


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையல் அருகே அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில், 12 அமெரிக்க படை வீரர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தானை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றியதை தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டினரும் உள்நாட்டு மக்களும் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். காபூல் விமான நிலையம் தற்போது வெளிநாட்டு ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஏராளமானோர் அங்கு தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், காபூல் விமான நிலையம் அருகே தீவிரவாத தாக்குதல் குறித்த அச்சுறுத்தல் இருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்ன் தெரிவித்தார். இதேபோன்ற தகவலை பிரிட்டனும் வெளியிட்டிருந்தது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், விமான நிலையம் அருகே ஒரு வெடிகுண்டும், அடுத்த சில நிமிடங்களில் விமான நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹோட்டலில் மற்றொரு குண்டும் வெடித்தது. இதில், 12 அமெரிக்க படை வீரர்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இதனிடையே, காபூல் விமான நிலைய குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் காரோஷன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், காபூல் குண்டுவெடிப்பை மறக்கமாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்; அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்தே ஆக வேண்டும், தேடிவந்து வேட்டையாடுவோம் என ஆவேசமாக கூறியுள்ளார்.

click me!