ஆப்கானிஸ்தானில் பாடகர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் வேலையைச் செய்ய முடியுமா? என்று கேட்டதற்கு தலிபான் செய்தித் தொடர்பாளர் அளித்த பதில் இது.
தங்களது கொள்கைகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களது படைப்புகள் இருந்தால் திரைத்துறையினர் தங்களது தொழிலை மாற்றிக் கொள்ளலாம் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் பாடகர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் வேலையைச் செய்ய முடியுமா? என்று கேட்டதற்கு தலிபான் செய்தித் தொடர்பாளர் அளித்த பதில் இது.
கடந்த மாதம், காஷா ஸ்வான் என்று அழைக்கப்படும் பிரபலமான நகைச்சுவை நடிகர் ஃபசல் முகமதுவை கொன்றதை தலிபான்கள் ஒப்புக்கொண்டனர்.
கடந்த வாரம் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி அஷ்ரப் கானி தலைமையிலான அரசை வெளியேற்றியபோது, இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள், பாடகர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர் தலிபான்கள்.
இதுகுறித்து "அவர் ஒரு நகைச்சுவை நடிகர் அல்ல. அவர் பல போர்களில் எங்களுக்கு எதிராக போராடினார். நாங்கள் அவரைத் தடுத்து நிறுத்தியபோது தப்பி ஓட முயன்றார். எங்கள் குழுவில் உள்ள ஆயுதம் தாங்கியவர்களை வைத்து அவரைக் கொல்லத் தூண்டினோம் ” என தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார்.
இப்போது, தலிபான்கள் போரால் பாதிக்கப்பட்ட நாட்டில் உள்ள அனைத்து பாடகர்களுக்கும், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு உத்தரவை வழங்கி உள்ளனர். ’’தலிபான்கள் கலைஞர்களைத் தங்கள் பணியைத் தொடர அனுமதிக்குமா என்று ஜபிஹுல்லா முஜாஹிதிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘’ஷரியாவுக்கு எதிராக அவர்களது படைப்புகள் இருந்தால், பாடகர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் தொழிலை மாற்ற வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.