தலிபான்கள் இறந்த சடலங்களுடன் உடலுறவு கொள்கிறார்கள் என ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி இந்தியா வந்துள்ள பெண் அதிர்ச்சி தகவல் கூறியுள்ளார். ஆப்கனில் காவல்துறையில் பணியாற்றிய அந்தப் பெண் தலிபான்களுக்கு பயந்து டெல்லி வந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்
.
தலிபான்கள் இறந்த சடலங்களுடன் உடலுறவு கொள்கிறார்கள் என ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி இந்தியா வந்துள்ள பெண் அதிர்ச்சி தகவல் கூறியுள்ளார். ஆப்கனில் காவல்துறையில் பணியாற்றிய அந்தப் பெண் தலிபான்களுக்கு பயந்து டெல்லி வந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல், கந்தகார் உள்ளிட்ட நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி வெளிநாட்டிற்கு தப்பினார். இதனை அடுத்து ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.மீதமுள்ள அமெரிக்கப் படைகளும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பின்னர் அங்கு ஆட்சியை அமைக்க தலிபான்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கனிஸ்தான் தலிபான்களிடம் வீழ்ந்துள்ளதையடுத்து அங்குள்ள ஏராளமான மக்கள் ஆப்கனை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். பல்வேறு நாடுகள் தங்களது தூதரகங்களை மூடிவிட்டு தங்கள் நாட்டு குடிமக்களை ஆப்கனை விட்டு அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர்.
குறிப்பாக தலிபான்களின் ஆட்சியில் பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவார்கள் என்பது ஒட்டுமொத்த சிவில் சமூகத்தையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. மலைகள், குகைகளில் பதுங்கி சண்டையிட்டு வந்த தலிபான்கள் இப்போது நாட்டை கைப்பற்றியுள்ள நிலையில், நாட்டில் உள்ள அழகிய இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதுடன், அவர்களை கட்டாயத் திருமணம் செய்து வருவதாகவும் பகீர் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. வீட்டிற்கு ஒரு இளம்பெண்களை தூக்கிச்சென்று பாலியல் இச்சைக்கு அவர்களை இரையாக்கி வருவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கின்றன. இந்நிலையில் அந்த நாட்டை விட்டு ஏராளமான பெண்கள் இளம்பெண்கள் வெளியேற காபூல் விமான நிலையத்தில் குவிந்தவண்ணம் உள்ளனர்.நாள்தோறும் தலிபான்கள் குறித்து வெளியாகும் தகவல்கள், அவர்கள் இத்தனை கொடூரமானவர்களா என பலரையும் யோசிக்க வைக்கும் வகையில் உள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி இந்தியா வந்துள்ள இளம்பெண் ஒருவர், தலிபான்கள் இறந்த உடல்களுடன் உடலுறவு கொள்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள முஸ்கான் (22) என்ற பெண், தான், ஆப்கானிஸ்தானில் காவல் துறையில் பணியாற்றி வந்ததாகவும், தலிபான் தீவிரவாதிகளுக்கு தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் கூறியுள்ளார். தலிபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ள நிலையில் வீட்டிற்கு ஒரு பெண்ணை தூக்கிச் சென்று காம இச்சையை தீர்த்துக் கொள்வதாகவும், தலிபான்கள் பிணங்களுடன் உடல் உறவு நெக்ரோஃபிலியாவில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
தன் போலீஸ் படையில் பணியாற்றி வந்ததால், தன்னை கொன்று விடுவதாக தாலிபன்கள் மிரட்டினார்கள், வேறுவழியில்லாமல் நான் அங்கிருந்து தப்பி வந்துள்ளேன் என கூறியுள்ள முஸ்கான், எனக்கு மட்டுமல்ல ஆப்கனிஸ்தான் அரசில் பணிபுரிந்த எல்லா பெண்களுக்கும் இதுதான் கதி, காமத்திற்காக அவர்கள் பிணங்களைக் கூட விட்டு வைப்பதில்லை, ஒரு பெண் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கூட அந்த மிருகங்களுக்கு கவலை இல்லை, எப்படியாவது தங்களது காமவெறி தீர வேண்டும் என்பதே அவர்களது நோக்கம், என அந்த பெண் கண்ணீர் மல்க ஆப்கனில் நடக்கும் கொடூரத்தை விளக்கியுள்ளார். தாலிபன்கள் வெரும் தீவிரவாதிகள் என்பதையும் தாண்டி, அவர்கள் வக்கிரம் நிறைந்த கொடூர வாதிகள் என்பது அந்தப்பெண்ணின் பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.