பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து... 83 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..!

By vinoth kumarFirst Published Jan 28, 2020, 12:19 PM IST
Highlights

ஆப்கானிஸ்தானில் தலிபான் கட்டுப்பாட்டு பகுதிகளில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 83 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஆப்கானிஸ்தானில் தலிபான் கட்டுப்பாட்டு பகுதிகளில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 83 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து காபூல் நகரத்தை நோக்கி போயிங் நிறுவனத்தை சேர்ந்த 737-400 விமானம் 83 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, புறப்பட்ட சில மணிநேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெக்யாக் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 83 பேரும் உயிரிழந்தனர். 

இதுதொடர்பாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், விமானம் விழுந்து நொறுங்கிய பகுதி தலிபான் கட்டுப்பாட்டில் உள்ளதால் மீட்பு பணிகளில் சற்று சிரமம் ஏற்பட்டது. விமானம் தொழில்நட்ப கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

உலகளவில் கடந்தாண்டில் விமான விபத்துகள் பாதியாக குறைந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு 13 விமான விபத்துகளில் 534 பயணிகள் உயிரிழந்தனர். ஆனால், கடந்தாண்டு மொத்தம் 8 விபத்துகளில் 257 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

click me!