கரோனா வைரஸால் சிக்கி சின்னா பின்னமாகும் சீனா...!! 90 ஆயிரம் பேர் பாதிப்பு, நர்ஸ் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி...!!

By Asianet TamilFirst Published Jan 27, 2020, 8:09 PM IST
Highlights

நான் கரோனா வைரஸ் தொடங்கிய வுஹான் பகுதியில் இருந்து தற்போது பேசுகிறேன். உண்மையைச் சொல்ல நான் இங்கு வந்துள்ளேன் சீனாவில் கரோனா வைரஸால் பாதிப்பு சிறிய அளவில் இல்லை. இங்கு ஏற்கனவே 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சீனாவில் மக்களை கதிகலங்க வைத்துவரும் கரோனோ வைரஸால் இதுவரை 2 ஆயிரத்தும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்,  90-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக சீனா சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. ஆனால், சீனாவின் வுஹான் நகரிலிருந்து ஒரு செவிலியர் வெளியிட்ட வீடியோவில் 90 ஆயிரம் பேர் பாதிக்கபட்டுள்ளதாக வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய சீன நகரமான வுஹான் நகரில்தான் முதன் முதலாக கரோனா வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. 

 

சீனா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அந்த வைரஸ் ஆசியாவின் இதர நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. 
சீனாவில் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் அந்த நாட்டு மக்களைக் கொண்டாட்டத்தில் விடாமல் கரோனா வைரஸ் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. 2,800 பேர் வரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சீன அரசு தெரிவிக்கிறது.ஆனால், கரோனோ வைரஸ் உருவான வுஹான் நகரில்  மருத்துவமனை ஒன்றில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் செவிலியர் அதிர்ச்சியளிக்கும் செய்தியை வெளியிட்டுள்ளார்.  

முகமூடி அணிந்து கொண்டு, தனது பெயரை வெளியிடாமல் அவர் வீடியோவில் கூறுகையில், “  நான் கரோனா வைரஸ் தொடங்கிய வுஹான் பகுதியில் இருந்து தற்போது பேசுகிறேன். உண்மையைச் சொல்ல நான் இங்கு வந்துள்ளேன் சீனாவில் கரோனா வைரஸால் பாதிப்பு சிறிய அளவில் இல்லை. இங்கு ஏற்கனவே 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

சீனாவில் தயது செய்து மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள்,  . விருந்துகளில், விடுதிகளில் சாப்பிடுவதை தவிருங்கள் எனக் கேட்கிறேன். மக்கள் அதிகமாகக் கூடுமிடங்களுக்கு செல்லாதீர்கள். இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை நீங்கள் பாதுகாப்பாகத் தவிர்த்தால் அடுத்த புத்தாண்டை மகிழ்ச்சியாக உங்கள் குடும்பத்துடன் கொண்டாடலாம். ஒரு பயன்படுத்தக்கூடிய முகமூடிகள், கண்ணாடிகள் மற்றும் துணிகளை வுஹானுக்கு நன்கொடையாக வழங்கி உதவுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
 

click me!