நிறைமாத கற்பமாக இருந்த ஆண்...!! அடையை அவிழ்த்து பார்த்த மருத்துவர்களுக்கு அதிர்சி...!!

Published : Jan 27, 2020, 06:45 PM IST
நிறைமாத கற்பமாக இருந்த ஆண்...!! அடையை அவிழ்த்து பார்த்த மருத்துவர்களுக்கு அதிர்சி...!!

சுருக்கம்

வயிறு புடைத்து வீங்கியிருந்த அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர் .  அப்போது மருத்துவர்களுக்கு திடீர் அதிர்ச்சி ஏற்பட்டது காரணம் அவர் நிறைமாத கர்ப்பமாக இருந்துள்ளார். 

இலங்கையில் ஆண் ஒருவர் கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  இலங்கையில்  மாத்தறை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு அதேபகுதியை சேர்ந்த நபரொருவர் வயிற்றுவலி காரணமாக சிகிச்சைக்கு வந்தார் .  வயிறு புடைத்து வீங்கியிருந்த அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர் .  அப்போது மருத்துவர்களுக்கு திடீர் அதிர்ச்சி ஏற்பட்டது காரணம் அவர் நிறைமாத கர்ப்பமாக இருந்துள்ளார்.   உடனே அவருக்கு இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்கப்போகிறது என  அறிந்த மருத்துவர்கள், 

அவரை உடனே பிரசவ வார்டுக்கு அனுப்பி வைத்தனர்.  குழந்தை எப்போது வேண்டுமானாலும் பிறக்கலாம் என்ற நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அப்போது அவர் தாடி மீசையுடன் பிரசவ வார்டில் படுத்திருந்தது அங்கிருந்த பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது இந்நிலையில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது .  இதுகுறித்து தெரிவித்துள்ள மருத்துவர்கள் ,  பெண்ணாக பிறந்த அந்த நபர் ஹார்மோன் சுரப்பு காரணமாக ஆண்களைப்போலவே தாடி மீசை வளர்ந்து ஒரு ஆணாகவே வாழ்ந்து வந்துள்ளார் .  மனதளவில் அவர் ஒரு ஆணாக இருந்தாலும் உடலளவில் ஒரு பெண்ணாகத்தான் இருந்துள்ளார் என கூறினார் . 

இதனால் அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது என தெரிவித்துள்ள மருத்துவர்கள் ,  அவரால் குழந்தைக்கு பால் தர முடியாத நிலை உள்ளதால் மருத்துவர்கள் குழந்தையை கவனித்து வருகின்றனர்.  இந்நிலையில் அந்த  நபர்  குழந்தையை தான் வளர்க்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார் . இருந்தாலும் அவரது அடையாள அட்டையில் அவர் ஒரு ஆண் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது .  அவர் ஒரு ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார் என்றும் அவர் குறித்த தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் மிக ரகசியமாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது .

PREV
click me!

Recommended Stories

இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது..! பதிலடி முன்பை விட இன்னும் பயங்கரமா இருக்கும்..! அசிம் முனீர் மிரட்டல்..!
இந்தியா-ரஷ்யா நட்பால் வயிற்றெரிச்சல்..! கதறப்போகும் தென்னிந்திய விவசாயிகள்..! டிரம்ப் எடுத்த அதிர்ச்சி முடிவு..!